ஆமாம்.! சுவிட்ச் இருக்கா ? பட்டனை அமுக்க. ஒவ்வொன்றாக தான் பாக்க முடியும் . எடப்பாடியின் கலகல பதில் .!!

 



நிவர் புயல் சேதாரங்கள் குறித்து கடலூரில் ஆய்வு செய்த தமிழக முதல்வர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்திற்கு ஆயிரம் மின்சார ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். காலையிலிருந்து இயல்புநிலை திரும்பியும் பணியை இன்னும் முடியவில்லை என்ற கேள்விக்கு


 


 


ஆமாம்! இன்றைக்கு ஒவ்வொன்றாக தான் பார்க்க முடியும். சுவிட்ச் இருக்கா ? ரிமோட் கண்ட்ரோலா ? பட்டனை அமுக்கி உடனே எல்லாம் போய் பார்க்கிறதுக்கு. ஒரு கம்பத்தை எடுத்து நிறுத்தி பாருங்க ? நீங்க போங்க ஒரு கம்பத்தை எடுத்து நிறுத்தி பாருங்க ? எவ்ளோ நேரம் ஆகும் என்று தெரியும்.


 


 


உழைச்சாத்தான் அந்த உழைப்பு தெரியும்.  ஒரு மின் கம்பத்தை எடுத்து அதுல வயர் மாட்டி வைத்தும் எல்லாம் சரி ஆகி விடாது. நிறைய மரங்கள் இருக்கும். மரத்தின் மேலே கிளைகள் விழுவதால் எர்த் அடிக்கும். இதெல்லாம் பார்த்து தான் வேலை செய்ய முடியும். அரசு ஊழியர்கள் தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் இரவு பகல் பாராமல் இந்த புயல் எதிர் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு பாராட்டு செய்யுங்க, மின்சாரம் மிக ஆபத்தானது. ஒவ்வொருவரின் உயிர் ரொம்ப முக்கியம் என முதல்வர் தெரிவித்தார்.


 


 


 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபத்தான நிலையில் மின்வயர் நடவடிக்கை எடுக்குமா ? மின்சார வாரியம் ,,,,

கூடலூர் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் அமைச்சர் கா.ராமச்சந்திரன்

,கூடலூர் சில்வர்கிளவுட், வனத்துறை சோதனை சாவடி அருகில் டெம்போ வேன் கவிழுந்து விபத்து.