சிந்தாரிப்பேட்டை மீரான் சாகிப் தெருவில் பல்வேறு செல்போன் உதிரிபாகங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்யும் கடைகள் உள்ளது.. இந்த தெரு மிகவும் குறுகிய தெரு.. தினமும் இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இங்குள்ள மின்சார பெட்டி திறந்தும் அதன் வயர்கள் வெளியே தெரிந்தபடியும் உள்ளது. உயர் மின் வயரில் சரிவர டேப் சுற்றாமல் வாட்டர் கேனை சொருகி வைத்துள்ளனர். இதை பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் சரி செய்யவில்லை.. தற்போதைய மழை காலத்தில் ஏதேனும் விபத்து ஏற்பட்டு ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை சரிசெய்வார்களா ??
நீலகிரி மாவட்டம்,கூடலூர் சில்வர்கிளவுட், வனத்துறை சோதனை சாவடி அருகில் டெம்போ வேன் கவிழுந்து விபத்து. சிறுகாயங்களுடனீ பயணிகள் உயிர் தப்பினர். நீலகிரி மாவட்ட செய்தியாளர் : MKR KUMAR
கருத்துகள்