விபூதி வாங்குவதில் நம்பிக்கை இல்லை என்றால் அதை வாங்காமல் இருக்க வேண்டியதுதானே... ஸ்டாலினே போட்டுத்தாக்கிய ஆர்.பி உதயகுமார் !


மதுரை: "விபூதி வாங்குவதில் நம்பிக்கை இல்லை என்றால் அதை வாங்காமல்... இருக்க வேண்டியதுதானே.. ஸ்டாலினின் இந்த செயல் எத்தனை பேருக்கு மன உளைச்சலை உண்டாக்கி உள்ளது" என்று திமுக தலைவரின் சர்ச்சை விவகாரம் குறித்து அமைச்சர் உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.


 


தேவர் ஜெயந்தியன்று, முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் திமுக தலைவர் ஸ்டாலின்.. அப்போது அங்கு அவருக்கு விபூதி அளிக்கப்பட்டது. அதை நெற்றியில் பூசாமல் பெயரளவில் கழுத்தில் தடவிக் கொண்ட அவர், மீதமிருந்த விபூதியை கீழே கொட்டினார்.. இதை எதேச்சையாக ஸ்டாலின் செய்திருந்தாலும், விபூதியை கீழே கொட்டும் வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.


இந்த செயலுக்கு தேவர் சமுதாய அமைப்புகள் ஒன்று சேர்ந்து ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்தன.. "தேவர் திருமகனார் ஆலயத்திற்கு ஆன்மீக நோக்கத்துடன் வராமல், அரசியல் சுயநலத்திற்காகவும், தேவரின மக்கள் ஓட்டுக்களை பெறுவதற்காகவும் வந்த திமுக தலைவரை வன்மையாக கண்டிக்கிறோம் என்றும், தேவரை இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொண்ட முக ஸ்டாலின் தமிழக முதல்வராக வருவோம் என பகல் கனவு காண்கிறார். அது சத்தியமா நடக்காது.. விபூதியை கீழே கொட்டியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும்" அறிக்கை போர்களை தொடுத்தனர். திருநிறு இந்நிலையில், இதே விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஆர்பி உதயகுமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு அவர், "திருநீறு வாங்குவதில் நம்பிக்கை இல்லை என்றால் திருநீற்றை வாங்காமல்... இருக்க வேண்டியதுதானே.. ஸ்டாலினின் இந்த செயல் பல பேருக்கு மன உளைச்சலை உண்டாக்கி உள்ளது" என்றார்


 


சாதனைகள் தொடர்ந்து ஸ்டாலினை பற்றி அமைச்சர் சொல்லும்போது, "தமிழக அரசின் சாதனைகளை ஸ்டாலினால் மறைக்க முடியாது.. அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை ஸ்டாலின் சொந்தம் கொண்டாட முயற்சிக்கிறார். 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சட்டசபையில் ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டு வரவில்லை.. பொது மன்றத்திலும் அவர் பேசவில்லை. சிந்தனை ஆனால் முதலமைச்சர் சிந்தனையில் உதித்து அதன்மூலம், சமூக நீதி காத்த சமூகநீதிக் காவலர் முதலமைச்சர் பெற்ற வெற்றியை ஸ்டாலின் ஒருபோதும் பங்கு போட முடியாது


 


இதை மக்கள் நன்கு அறிவார்கள்.... ஸ்டாலினால் தமிழக மக்களுக்கு எந்தவொரு நல்ல காரியமும் இதுவரை நடக்கவில்லை.. இனியும் நடக்க போவதில்லை" என்றார்.


 


 


 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபத்தான நிலையில் மின்வயர் நடவடிக்கை எடுக்குமா ? மின்சார வாரியம் ,,,,

கூடலூர் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் அமைச்சர் கா.ராமச்சந்திரன்

,கூடலூர் சில்வர்கிளவுட், வனத்துறை சோதனை சாவடி அருகில் டெம்போ வேன் கவிழுந்து விபத்து.