மின் திருட்டு நடவடிக்கை எடுக்குமா ? மின் வாரியம் ....

N விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் உள்ள கூனம்பட்டி கிராமத்தில் மின் திருட்டு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக. நடைபெறுகிறது வீடுகளில் மின் இணைப்புகளை பெற்றுக்கொண்டு இதனை விவசாயத்திற்கு மின் மோட்டார் பொருத்தி பயன்படுத்தப்படுகிறது


 


இது சம்பந்தமாக பலமுறை வளையப்பட்டி செயல் பொறியாளரிடம் வயர்மேன் இடமும் பலமுறை புகார் செய்தும் எந்தவிதமான பயனும் இல்லை. இவர்களிடம் இருந்து வரும் பதில் எத்தனை மின் மோட்டார்கள் பொருத்தினாலும் சரியான முறையில் மின்சாரம் கட்டணம் செலுத்தப்படுகிறது இதில் என்ன உங்களுக்கு பிரச்சனை? என வினா எழுப்புகிறார்கள்


 


மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விதிகளுக்கு அப்பாற்பட்டு மின்சாரத்தை தவறாகப் பயன்படுத்தப்படும் அனைத்து முறைகளும் மின் திருட்டு கருதப்படும் இந்த விதிகள் கூட தெரியாமல் பேசுவது மிகவும் வேடிக்கையாக உள்ளது


 


இதனை எல்லாம் பார்க்கும் பொழுது மின் திருட்டில் ஈடுபடும் நபர்களிடமிருந்து வளையப்பட்டி செயல் பொறியாளர் மற்றும் வயர்மேன் இருவரும் ஒவ்வொரு மாதமும் பணத்தைப் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்க வில்லையோ என சந்தேகம் எழுகிறது


 


மின் திருட்டில் ஈடுபடும் நபரின் மீது இந்திய மின்சார சட்டம் 2003 பிரிவு (135/1) (C) னௌ படி மின் திருட்டு அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் பணிவான கோரிக்கை


 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபத்தான நிலையில் மின்வயர் நடவடிக்கை எடுக்குமா ? மின்சார வாரியம் ,,,,

கூடலூர் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் அமைச்சர் கா.ராமச்சந்திரன்

,கூடலூர் சில்வர்கிளவுட், வனத்துறை சோதனை சாவடி அருகில் டெம்போ வேன் கவிழுந்து விபத்து.