சென்னை புறநகர் மின்சார ரயில்களை இயக்க வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்சார ரயில்களை இயக்க தெற்கு ரயில்வேக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.


தமிழகத்தில் மாநிலங்களுக்கு இடையிலான மற்றும் மாநிலத்திற்குள்ளான ரயில் சேவையை தெற்கு ரயில்வே ஏற்கெனவே மீண்டும் தொடங்கிவிட்டது. அதேபோன்று, பொருளாதாரத்தை மீட்டெடுக்க சென்னையில் மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. பொதுமக்களுக்காக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புறநகர் ரயில் சேவை மற்றும் மின்சார ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்.


இது தொடர்பாக கடந்த செப்டம்பர் 2-ம் தேதி தமிழக அரசு வலியுறுத்தியிருந்தது. இந்த ரயில்களை மீண்டும் இயக்குவது, பொருளாதாரத்தை விரைவாக மீட்டெடுக்கவும் பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். நல்ல பிளாட் வாங்க நல்லா எடை போடுங்க.. 24 முதல் 26ம் தேதி வரை புக்கிங் மேளா.. வாங்க வாங்க! ஆகையால் சென்னை, சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார ரயில்கள், புறநகர் ரயில்களை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் மீண்டும் இயக்குவதற்கு தெற்கு ரயில்வேக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அக்கடிதத்தில் கூறியுள்ளார். 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபத்தான நிலையில் மின்வயர் நடவடிக்கை எடுக்குமா ? மின்சார வாரியம் ,,,,

கூடலூர் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் அமைச்சர் கா.ராமச்சந்திரன்

,கூடலூர் சில்வர்கிளவுட், வனத்துறை சோதனை சாவடி அருகில் டெம்போ வேன் கவிழுந்து விபத்து.