ஒரே ஒரு அரசாணையை வெளியிட்டு, 3 மாங்காய்களை நச்சென அடித்துள்ளார் எடப்பாடியார்.

bb


சென்னை: ஒரே ஒரு அரசாணையை வெளியிட்டு, 3 மாங்காய்களை நச்சென அடித்துள்ளார் எடப்பாடியார்.. இதன்மூலம் மாணவர்கள் மத்தியில் அதிமுகவுக்கான கிரேஸ் கூடி கொண்டே வருகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க அரசு முடிவெடுத்தது. உண்மையில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குமாறுதான் இதுதொடர்பாக உருவாக்கப்பட்ட கமிஷன் பரிந்துரைத்திருந்தது. ஆனால் தமிழக அரசுதான் இதை 7.5 சதவீதமாக குறைத்து விட்டது. இங்கேயே அதிமுக அரசுக்கு முதல் சறுக்கல் வந்து விட்டது. அதனால்தான் இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் பெற வேண்டிய நிலைமை ஏற்பட்டது.. ஏற்கனவே காலதாமதமாகி விட்ட நிலையில் மேலும் அவகாசம் கேட்டார்..


பொதுவாக, ஆளுநரை யாரும் உத்தரவிட்டு வலியுறுத்த முடியாது என்றாலும் கூட ஏன் இந்த தாமதம் என்று எல்லோரும் கேட்க ஆரம்பித்து விட்டனர்.


 


மக்களுக்கு ஆளுநர் மீது அதிருப்தியே ஏற்படும் அளவுக்கு இந்த விவகாரம் பெரிதாகியது.. இதில் உள்ளடி அரசியலும் பின்னிப் பிணைந்திருப்பதுதான் பலரையும் அதிர வைத்தது


அதாவது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த சட்ட மசோதாவின் மூலமாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்து மக்களின் மனதில் இடம் பிடிக்க நினைத்தார்


 


அபிப்பிராயம் ஏற்கனவே பல்வேறு அறிவிப்புகள் மூலம் மாணவர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் எடப்பாடியாருக்கு நல்ல அபிப்பிராயம் உள்ளது. அதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. அந்த வரிசையில் இந்த உள் ஒதுக்கீடும் அமைய வேண்டும் என்று அவர் விரும்பினார். திமுக இன்னொரு பக்கம், இந்த உள் ஒதுக்கீடு வந்தால் எடப்பாடியாருக்கு நல்ல பெயர் கிடைத்து விடுமே என்று உள்ளுக்குள் பதை பதைப்போடு திமுக தரப்பு இருந்தது


 


ஒதுக்கீடு வர வேண்டும் என்று வெளியில் குரல் கொடுத்தாலும் கூட அப்படி வந்தால் அதன் முழுப் பெயரும் எடப்பாடியாருக்குத்தான் போகும் என்ற அச்சம் அக்கட்சிக்கு நிறையவே இருந்தது.. எனவேதான் முன்கூட்டியே ஆளுநர் மாளிகை முன்பு பெரும் கூட்டத்தைக் கூட்டி தனது பலத்தைக் காட்டி போராட்டம் ஒன்றை நடத்தி விட்டது. மாணவர்கள் நலன் நாளை ஆளுநர் ஒப்புதல் அளித்தாலும் கூட, எங்களது போராட்டத்தால்தான் ஆளுநர் பணிந்து வந்தார் என்று பேசிக் கொள்ளலாமே என்ற ஸ்கெட்ச்தான் இது என்று அன்றைய தினமே கணிக்கப்பட்டது


 ஆனால் இந்த கணிப்பு நேற்று முழுவதுமாக நிரூபணமாகிவிட்டது.. எடப்பாடியார் நேற்று ஆளுநரின் ஒப்புதலின்றி இது தொடர்பான அரசாணை வெளியிட்டார்.. மாணவர் நலன் கருதி அரசாணை வெளியிட்டதற்கான விளக்கமும் தந்தார். ஸ்டாலின் ஆனால் ஸ்டாலின் விடவில்லை.. "அரசாணையில், ஆளுநரின் ஆணைப்படி" என்று வெளியிட்டிருப்பது - வழக்கமான நிர்வாக நடைமுறையா அல்லது ஆளுநரிடம் அந்தக் கோப்பில் கையெழுத்து வாங்கப்பட்டுள்ளதா?


 


என்று கேள்வி மேல கேள்வி கேட்டார்.. தங்கள் போராட்டத்தால்தான் அரசாணை வெளியிட்டதாகவும், அதற்கு நன்றி என்றார். சூப்பர் இப்போது ஆளுநரே ஒப்புதல் அளித்துவிட்டார்.. ஆக, ஒரே கல்லில் எடப்பாடியார் 3 மாங்காய்களை அடித்துள்ளார்.. ஒன்று, அதிமுகவுக்கு பெயர் கிடைத்துவிட்டது.. மற்றொன்று, போராட்டம் நடத்தியும் திமுகவுக்கு இதன்மூலம் பயன் இல்லாமல் போய்விட்டது.. அடுத்ததாக, ஆளுநரின் ஒப்புதலே இல்லாமல் அரசாணை வெளியிட்டு, பாஜகவையும் திக்குமுக்காட வைத்துவிட்டார்


சமூக நீதி காத்த வீராங்கணை அன்று இப்படித்தான் ஜெயலலிதா 69% இட ஒதுக்கீட்டை நிலை நிறுத்தி, சமூகநீதி காத்த வீராங்கனை என்ற பெயரை பெற்றார்.. இப்போது அதே ரூட்டில் எடப்பாடியார் வந்து சேர்கிறார்


 


. என்னதான் நெருக்கடி பாஜக பக்கமிருந்து கிளம்பி வந்தாலும், யாருக்கும் அடிபணிய மாட்டோம் என்பதைதான் அதிமுக அரசு செய்து காட்டி உள்ளது!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபத்தான நிலையில் மின்வயர் நடவடிக்கை எடுக்குமா ? மின்சார வாரியம் ,,,,

கூடலூர் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் அமைச்சர் கா.ராமச்சந்திரன்

,கூடலூர் சில்வர்கிளவுட், வனத்துறை சோதனை சாவடி அருகில் டெம்போ வேன் கவிழுந்து விபத்து.