ஆடு மேய்க்கும் தொழிலாளியை காலில் விழ வைத்த கும்பல்,

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆடு மேய்க்கும் தொழிலாளியை காலில் விழ வைத்த ஏழு பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே இருக்கின்ற ஒளைகுலம் வடக்குத் தெருவில் 55 வயதுடைய பால்ராஜ் என்பவர் வசித்துவருகிறார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து கொண்டிருக்கிறார். அதே பகுதியில் இருக்கும் 60 வயதுடைய சிவசங்கு என்பவருக்கும் பால்ராஜ்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருமங்கலக்குறிச்சியில் பால்ராஜ் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது சிவசங்கு தனது மகன் சங்கிலி பாண்டி, உறவினர்களான, கார்த்திக், பெரிய மாரி, வீரையா, மகேந்திரா, மகாராஜன் ஆகியோர் அப்பகுதியில் ஆடு மேய்க்கச் சென்று உள்ளனர்.


அச்சமயத்தில் ஆடு மேய்க்கும் போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் மிகுந்த ஆத்திரம் அடைந்த சிவசங்கு தரப்பினர் பால்ராஜை காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவேண்டும் என மிரட்டியுள்ளனர்.அவர் மன்னிப்பு கேட்கும் காட்சியை அங்கிருந்த நபர் ஒருவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. இதுபற்றி பால்ராஜ் போலீசில் புகார் அளித்துள்ளார்.புகாரின் பேரில் விசாரணை செய்து வந்த காவல்துறையினர் வழக்கில் தொடர்புடைய சிவசங்கு, சங்கிரி பாண்டி உட்பட 7 பேரை கைது செய்துள்ளனர்.இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பாதிக்கப்பட்ட பால்ராஜ் வீட்டுக்கு நேரில் சென்று நடந்த சம்பவத்தை பற்றி கேட்டறிந்தார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபத்தான நிலையில் மின்வயர் நடவடிக்கை எடுக்குமா ? மின்சார வாரியம் ,,,,

கூடலூர் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் அமைச்சர் கா.ராமச்சந்திரன்

,கூடலூர் சில்வர்கிளவுட், வனத்துறை சோதனை சாவடி அருகில் டெம்போ வேன் கவிழுந்து விபத்து.