திருவில்லிபுத்தூர் நகராட்சியில் 74வது சுதந்திர தின விழா..ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் முத்தையா சந்திரபிரபா அவர்களின் தலைமையில் நடைபெற்றது
திருவில்லிபுத்தூர் நகராட்சியில் 74வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டத விழாவிற்கு ஆணையாளர் பொறுப்பு பொறியாளர் ரமேஷ் தலைமை தாங்கினார் அலுவலக உதவியாளர் வெங்கடசுப்ரமனியன் அனைவரையும் வரவேற்றார் விழாவில்
- ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்ததோடு மகாத்மா காந்தியடிகள், முன்னாள் நகர்மன்றத் தலைவர் சிவகாமி நாத பிள்ளை என்ற பாலையா பிள்ளை ஆகியோர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பின்னர் நடைபெற்ற விழாவில் கொரானா காலத்திலும் சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநர்கள் சுகாதாரத்துறை ஊழியர்கள் அலுவலக ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு பொன்னாடை போர்த்தி சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார் விழாவில் நகரமைப்பு அலுவலர் மருது பாண்டியன் மேலாளர் பாபு சுகாதார ஆய்வாளர் பழனி குரு ஸ்ரீவில்லிபுத்தூர் கூட்டுறவு நகர வங்கி தலைவர் எஸ் எம் பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் விழாவில் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் முனியப்பன், நாகராஜன் என்ற சந்திரன் உட்பட பலர் பேசினர் சுகாதார ஆய்வாளர் சரவணன் நன்றி கூறினார் நகராட்சி ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் விழா நிகழ்ச்சிகளை அரசு ஊழியர் சங்க தலைவர் அலுவலர் திருமூர்த்தி தொகுத்து வழங்கினார்
கருத்துகள்