எந்த மொழியும் கட்டாயம் இல்லை.. மாணவர்களே தேர்வு செய்யலாம்.. மத்திய அரசு
சென்னை: மும்மொழிக் கொள்கையில் சமஸ்கிருதம்விருப்ப பாடமாக அறிமுகம் செய்யப்படும், மாணவர்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையிலேயே மொழிகளை தேர்வு செய்யலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. பெரும் எதிர்ப்பிற்கும் விவாதத்திற்கும் இடையில் தற்போது தேசிய அளவில் புதிய கல்விக்கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.இதற்கான அனுமதியை மத்திய அமைச்சரவை இன்று வெளியிட்டது. மத்திய அரசின் அதிரடி அறிவிப்புகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. இதன்மூலம் குறைத்தது 5ம் வகுப்பு வரை தாய் மொழிக்கல்வியை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்பின்புதான் ஆங்கிலத்திற்கு அனுமதி அளிக்கப்படும். 5ம் வகுப்பிற்கு பின் மும்மொழிக் கொள்கையை கொண்டு வர மத்திய அரசு இந்த புதிய கல்விக்கொள்கையில் அனுமதி அளித்துள்ளது.
இந்த நிலையில் மும்மொழிக் கொள்கையில் சமஸ்கிருதத்தை விருப்ப பாடமாக அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையிலேயே மொழிகளை தேர்வு செய்யலாம். தங்களுக்கு தேவை இல்லாத பாடங்களை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
எந்த மொழியையும் படிக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை . தேர்வு செய்யலாம் எந்த மொழியையும் மாணவர்கள் மீது திணிக்க போவது இல்லை. எந்த மொழிகளை மும்மொழி கொள்கைக்கு அனுமதிக்கலாம் என்பதை மாநில அரசுகள் முடிவு எடுக்கலாம். வெளிநாட்டு மொழிகளையும் மாணவர்கள் படிக்க தேர்வு செய்யலாம். மாணவர்களுக்கு "சைகை - மொழி" அறிமுகப்படுத்தப்படும், என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி இருக்கும் முன்னதாக புதிய கல்விக்கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையில் இந்தி இல்லாத மாநிலங்களில் இந்தியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது. இதற்கு நாடு முழுக்க கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இது இந்தி திணிப்பு என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழகத்திலும் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. நீக்கப்பட்டது இதனால் தற்போது அந்த பகுதி நீக்கப்பட்டுள்ளது . அதற்கு பதிலாக மும்மொழி கொள்கை எப்போதும் போல இருக்கும். மாறாக மாணவர்கள் தங்கள் விருப்ப மொழிகளை தேர்வு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. முக்கியமாக தற்போது வெளிநாட்டு மொழிகள்,சமஸ்கிருதம் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்