டெல்லியை புரட்டிய மழை.. பாலத்திற்கு கீழ் அப்படியே மூழ்கிய பேருந்து.. ஒருவர் பலி..

ோடெல்லி: டெல்லியில் பேருந்து ஒன்று பாலம் ஒன்றுக்கு கீழ் மழை வெள்ளத்தில் மூழ்கியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் நேற்று இரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது. அங்கு தற்போது வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்து உள்ளது. அதிலும் இன்று அதிகாலையில் இருந்து தீவிரமாக மழை பெய்தது. டெல்லியில் பல இடங்களில் 7-9 செமீ மழை பெய்தது. இதனால் சாலைகள் வெள்ளக்காடாக மாறியது. டெல்லியில் 3 மணிநேர கனமழை.. கால்வாயில் வெள்ள பெருக்கு.. வீட்டை அப்படியே உள்ளித்த நீர்.. பகீர் வீடியோ பாலத்திற்கு கீழ் இந்த நிலையில் டெல்லியில் மிண்டோ தரை பாலம் பகுதி வெள்ளத்தில் அப்படியே மூழ்கியது. அதீத மழை காரணமாக மிண்டோ சாலைக்குள் தண்ணீர் புகுந்து அங்கு வெள்ளம் ஏற்பட்டது. இதனால் அந்த பாலத்திற்கு கீழ் பகுதியில் இன்று அதிகாலையில் இருந்து தண்ணீர் தேங்கி இருக்கிறது. இதில் நிறைய வாகனங்கள் சிக்கிக் கொண்டது. பேருந்து மாட்டிக்கொண்டது இதையடுத்து அந்த தரை பாலத்தை கடக்க முயன்ற பேருந்து வெள்ளத்தில் மூழ்கியது. 20 பயணிகள் உடன் அந்த பேருந்து தண்ணீருக்குள் சென்று உள்ளது. எப்படியாவது பாலத்தை கடந்து விடலாம் என்று பேருந்து சென்றுள்ளது.னால் செல்லும் வழியிலேயே பேருந்து பாதி வழியில் தண்ணீருக்குள் மூழ்கியது. மீட்கப்பட்டது இதையடுத்து அங்கு வேகமாக தீயணைப்பு வீரர்கள் வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். அருகே ஏணி வைத்து உள்ளே சென்று பயணிகள் மீட்கப்பட்டனர். பேருந்து ஓட்டுநர், நடத்துனர், பயணிகள் மீட்கப்பட்டனர். இங்கு அடிக்கடி மழை வரும் போது இப்படி பேருந்துகள் சிக்குவது வழக்கம் ஆகியுள்ளது. பலியானார் இந்த பயணிகளை மீட்கும் போதுதான் அங்கு டாடா ஏஸ் வாகனத்தில் வந்த இன்னொரு நபர் சிக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவரும் பாலத்தை கடந்து விடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளே சென்று இருக்கிறார். இவர் தண்ணீருக்குள் சிக்கி அங்கேயே பலியாகி உள்ளார். குந்தன் என்று அழைக்கப்படும் இவரின் உடல் இன்று தீயணைப்பு வீரர்கள் மூலம் மீட்கப்பட்டது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபத்தான நிலையில் மின்வயர் நடவடிக்கை எடுக்குமா ? மின்சார வாரியம் ,,,,

கூடலூர் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் அமைச்சர் கா.ராமச்சந்திரன்

,கூடலூர் சில்வர்கிளவுட், வனத்துறை சோதனை சாவடி அருகில் டெம்போ வேன் கவிழுந்து விபத்து.