கோழி பண்ணையால் உருவாகும் வைரஸ்..! உலகின் பாதி மக்கள் காலி..

வாஷிங்டன்: சுமார் 4 லட்சம் மக்களை உலக அளவில் பலி எடுத்த, கொரோனா வைரஸை விட மோசமான வைரஸ், கோழிப் பண்ணைகளிலிருந்து பரவுவதற்கான வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானி ஒருவர் வெளியிட்டுள்ள எச்சரிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகின் பாதி மக்கள் தொகையை காலி செய்ய அந்த வைரசால் முடியும் என்கிறார் அந்த விஞ்ஞானி. அந்த வைரஸ் பெயர் அபோகலைப்டிக் (apocalyptic) என்ற தகவலையும் விஞ்ஞானி வெளியிட்டுள்ளார். பிரபல புத்தக ஆசிரியரான அவர் பெயர், டாக்டர். மைக்கேல் கிரேகர். உலகம் முழுக்க கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்த நிலையில் அறிவியலாளரும், 'How Not To Die' என்ற பிரபல புத்தகத்தின் ஆசிரியருமான டாக்டர் மைக்கேல் கிரேகர், இவ்வாறு ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அழிக்கப்பட்டாலும், உலகில் அடுத்த பெருந்தொற்று நோய் என்பது கோழிப் பண்ணைகளில் இருந்து தான் உருவாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் பெயர்அபோகலைப்டிக் வைரஸ் ஆகும். கோழிப்பண்ணைகள் இருக்கும் வரை பெரும் தோற்று இருக்கத்தான் செய்யும் என்று அவர் அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டுள்ளார். சைவ உணவு பெஸ்ட் கிரேகர் நீண்டகாலமாகவே, சைவ உணவுகள், காய்கறி உணவுகள் போன்றவற்றை சாப்பிடுவதை வலியுறுத்தி வருபவர். விலங்கு உணவு சாப்பிடுவது ஆபத்து என்று அவர் தொடர்ந்து கூறிவருகிறார்.


விலங்குகள், பறவைகளுடன் மனித இனம் நெருங்கி பழகும்போது, பெரும் தொற்று நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அவர் எச்சரித்துள்ளார். புதிய புத்தகம் ‘How To Survive A Pandemic,' என்று அவர் எழுதியுள்ள அந்த புதிய புத்தகத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது: H5NI பறவைக்காய்ச்சல் 1997 ஆம் ஆண்டு ஹாங்காங் நாட்டில் உருவானது. பல மில்லியன் கோழிகள் கொல்லப்பட்ட பிறகுதான் அந்த வைரஸ் ஒழிக்கப்பட்டது. 2003 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் உருவான ப்ளூ காய்ச்சல் முழுமையாக ஒழிக்கப்பட முடியாத நிலையில்தான் உள்ளது.


அவ்வப்போது தோன்றி மக்களை அச்சுறுத்துகிறது. கோழி வளர்ப்பு முறை பண்ணைகளிலிருந்து வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக கோழி வளர்ப்பு முறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். மிக நெருக்கமான பகுதிகளில் கோழிகள் அடைத்து வைக்கப்படுகிறது இப்போது வாடிக்கையாக இருக்கிறது. தங்கள் சிறகுகளை கூட அடித்துக் கொள்ள முடியாத ஒரு நிலையில் கோழிகள் அடைபட்டுக் கிடக்கின்றன. "கிம் இறந்துட்டார்.. மூளைச்சாவு… சிறு பண்ணைகள் ஓகே அதிகப்படியாக, கோழி எச்சங்கள் சேரும் போது அதிலிருந்து நோய்க்கிருமிகள் உருவாகுகின்றன.


எனவே கோழிகளை பெரிய அளவில் உற்பத்தி செய்யக்கூடிய பண்ணைகளுக்கு தடை விதிக்க வேண்டும். சிறு சிறு பண்ணைகள் இருந்தால் பரவாயில்லை. போதிய அளவுக்கு இடைவெளி இருக்க வேண்டும், உரிய சுகாதார நடவடிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும், இயற்கைக்கு மாறாக முட்டைகள் உருவாக்குவது, கோழி குஞ்சு பொரிப்பது போன்றவை கைவிடப்பட வேண்டும். இவ்வாறு அவர் தனது புத்தகத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபத்தான நிலையில் மின்வயர் நடவடிக்கை எடுக்குமா ? மின்சார வாரியம் ,,,,

கூடலூர் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் அமைச்சர் கா.ராமச்சந்திரன்

,கூடலூர் சில்வர்கிளவுட், வனத்துறை சோதனை சாவடி அருகில் டெம்போ வேன் கவிழுந்து விபத்து.