தமிழகத்தில் முதல் முறை.. 17 வயது சிறுமி, 25 வயது பெண் கொரோனாவால் பலி!

சென்னை: தமிழகத்தில் முதல் முறையாக 17 வயது சிறுமி, கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இன்று, மொத்தம் 12 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக சுகாதார துறை தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது. தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை என்பது, 220 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது.

வயது முக்கியத்துவம் இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இறந்தவர்கள் வயது மிகவும் முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மேலும் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் இருப்போர்தான் இந்த வைரஸ் தொற்று காரணமாக பலியாவதாக இதுவரை கூறப்பட்டு வந்தது.


ஆனால், இன்று உயிரிழந்தோரின் வயது என்ன என்பதை பார்த்தால், 17,25,33,46,47,52,56 என்ற அளவில் உள்ளது. 7 பேருக்கு 60 வயதுக்கு கீழ் அதாவது 12 பேரில் 7 பேர் 60 வயதுக்கு உட்பட்டவர்கள். இதில் 17, 25, 33 வயது என்பதெல்லாம் இதுவரை கேள்விப்பட்டிராத தகவலாக உள்ளது. இந்த சிறுமி ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், கடந்த 3ம் தேதி சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நிலையில் அன்றைய தினம் இரவு 9 மணி 35 நிமிடங்களுக்கு அவர் பலியானதாகவும் அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. 17 வயது சிறுமி மரணம் முன்னதாக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவர் பரிசோதனை செய்யப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மற்றொருவர் வேலூரை சேர்ந்த 25 வயது பெண்மணி என்பது தெரியவந்துள்ளது.


வயது குறைவானவர்களுக்கு, கொரோனா பாதிப்பு வராது என்று கூறப்படுகிறது. அப்படியே வந்தாலும் எளிதாக குணப்படுத்திவிடலாம். இளம் வயது இதிலும் பெண்கள் என்றால் எளிதில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவதில்லை என்பது உலகளாவிய அளவில் உள்ள டிரென்ட். ஆனால் தமிழகத்தில் இளம் வயதை சேர்ந்தவர்கள், அதுவும் இரண்டு பெண்கள் இவ்வாறு பலியாகியுள்ள சம்பவம் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் 17 வயது சிறுமிக்கு டைப் 1 வகை நீரிழிவு நோய் இருந்ததாக அரசு தெரிவித்துள்ளது.


கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் என்ன நோய்கள் சிகிச்சையளிக்கப்பட்டபோது 17 வயது சிறுமிக்கு, ஹார்ட் அட்டாக், ஏற்பட்டு பலியானதாகவும், அவருக்கு, கிட்னி பிரச்சினை, இருந்ததாகவும், கிட்னி நோய் தொற்று, நீரிழிவு மற்றும் கொரோனா போன்றவைதான், 17 வயது சிறுமி பலியாக காரணம் என்றும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபத்தான நிலையில் மின்வயர் நடவடிக்கை எடுக்குமா ? மின்சார வாரியம் ,,,,

கூடலூர் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் அமைச்சர் கா.ராமச்சந்திரன்

,கூடலூர் சில்வர்கிளவுட், வனத்துறை சோதனை சாவடி அருகில் டெம்போ வேன் கவிழுந்து விபத்து.