கொரோனாவால் இறந்தவரை குடும்பத்தினருக்கு தெரியாமல் தகனம் !


கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை இந்தியாவிலேயே மும்பை மாநகரில் தான் அதிகம் உள்ளது. மும்பையில் மட்டும் 36,932 பேரிடம் தொற்று கண்டறியப்பட்டுள்ளது, இதுவரை 1,173 பேர் இறந்துள்ளனர். கொரோனா வார்டுகளில் இருந்து இறந்தவர்கள் உடல்களை அப்புறப்படுத்துவதில் மும்பை மாநகராட்சி பெரும் குளறுபடியை சந்திப்பதாக சில நாட்களுக்கு முன் விமர்சனம் எழுந்தது.

இந்த நிலையில் மும்பையின் வடாலா பகுதியில் வசிக்கும் ராகேஷ் வர்மா என்பவர் கொரோனா தொற்று ஏற்பட்டு மே மாத தொடக்கத்தில் ஜோகேஸ்வரியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ராகேஷ் வர்மாவுக்கு கொரோனா ஏற்பட்டதால் அவரது குடும்பத்தினர் அனைவரும் கட்டாய சுய தனிமையில் வைக்கப்பட்டிருந்தனர்.

மே 21 அன்று சுய தனிமை முடிந்ததும், மருத்துவமனையில் உள்ள ராகேஷ் வர்மாவை சந்திக்க குடும்பத்தினர் சென்றுள்ளனர். அங்கு விசாரித்த போது தான் அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. ராகேஷ் வர்மா 17-ம் தேதியே இறந்துவிட்டதாகவும், அவரது உடலுக்கு யாரும் உரிமை கோராததால் போலீசார் உடலை அப்புறப்படுத்தியதாகவும் அங்கு பணியாற்றிய செவிலியர் தெரிவித்துள்ள


இது தொடர்பாக மும்பை வடாலா காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. “எனக்கு நீதி வேண்டும். என் மகன் உடலை பார்க்காமல் அவர் இறந்துவிட்டார் என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது?” என்று கேட்டு இறந்தவரின் தாயார் ஆனந்தா கதறி அழுதுள்ளார். அவருக்கு ஆக்சிஜன் வழங்கப்படுவதாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கூறி வந்துள்ளனர். கடைசியாக அவர் இறந்ததை கூட தெரிவிக்காமல் உடலை அவர்களே தகனம் செய்துவிட்டனர். இது மருத்துவமனை, மும்பை மாநகராட்சி, போலீசாரின் அலட்சியப் போக்கையே காட்டுவதாக கடும் விமர்சனம் எழுந்துள்ளது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபத்தான நிலையில் மின்வயர் நடவடிக்கை எடுக்குமா ? மின்சார வாரியம் ,,,,

கூடலூர் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் அமைச்சர் கா.ராமச்சந்திரன்

,கூடலூர் சில்வர்கிளவுட், வனத்துறை சோதனை சாவடி அருகில் டெம்போ வேன் கவிழுந்து விபத்து.