தமிழகம் மக்கள் முன்னேற்ற கழக முக்கிய அறிவிப்பு
27-05-2020 (புதன்கிழமை)
கருப்புச்சட்டை போராட்டம் 200 வது நாள் :
நமது வீடுகளின் முன்பு நின்று போராடுவோம்
இணைய தளம் வழியில் ஒன்றிணைவோம்
=======================
தமிழகம் மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் அனைவருக்கும் வணக்கம்
தேவேந்திர குல வேளாளர் அரசாணை வெளியிட வலியுறுத்தி தலைவர் தமிழின வேந்தர் தலைமை நாம் தொடர்ந்து போராடி வருகிறோம். அந்த வகையில் தேவேந்திரகுல வேளாளர் என்று ஆணை வழங்க அரசு கால தாமதம் செய்தும். மறுத்தும் வருகின்றது. தமிழக அரசை/ மத்திய அரசை கண்டிக்கும் வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் தேதி முதல் நாம் கருப்புச்சட்டை அணிந்து போராடி வருகிறோம். கருப்புச்சட்டை போராட்டம் தொடங்கி வருகிற புதன்கிழமையோடு 200 நாட்கள் ஆகின்றது. கொடிய கொரோனா தனிமைப்படுத்துதல் காலத்திலும் தேவேந்திரகுல வேளாளர் அரசாணை வேண்டும் என்ற முழக்கத்தை நெஞ்சில் சுமந்து அரசாணை வழங்க மறுக்கும் அரசுக்கு நமது எதிர்ப்பை உடலில் கருப்பு உடையாக சுமந்து 200 நாட்களாக தெரிவித்து வருகிறோம். வரலாற்றில் இது ஒரு முக்கிய போராட்டமாக மாறியிருக்கிறது, கருப்புச்சட்டை அறவழிப் போராட்டத்திற்கு நிச்சயம் ஒருநாள் வெற்றி உண்டு.
தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை உணர்ச்சிமிகு சமூகமாக பொதுவெளியில் புறம் பேசுபவர்கள் மத்தியில் தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களை அறவழியில் தொடர் கருப்பு சட்டை அணியும் போராட்டம் என்று ஒரு போராட்டத்தை அறிவித்து அனைவரின் புருவத்தை உயரச் செய்த உன்னத தலைவர் தமிழின வேந்தர் அவர்களின் வேண்டுகோளின்படி வருகிற புதன்கிழமை (27 -05-2020 )நாம் அனைவரும் அவரவர் வீடுகளின் முன்பு நமது உறவுகளை ஒன்று திரட்டி முககவசம் அணிந்து, சமூக இடைவெளிவிட்டு நின்று கைகளில் " தமிழக அரசே தேவேந்திரகுல வேளாளர் அரசாணை வெளியிடு " கருப்புச் சட்டையில் 200 நாட்களாக போராடுகின்றோம் கருணை இல்லையா" என்ற முழக்கங்கள் தாங்கிய அட்டைகளை கையில் ஏந்தி நின்று அறவழியில் முழக்கமிட்டு அதனை காணொளியாக சமூக ஊடகங்களான முகநூல் வாட்ஸ்அப் டிவிட்டர் போன்ற இணைய பக்கங்களில் வெளியிட்டு தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அடையாள போராட்டத்தை அன்றைய தினம் முன்னெடுக்க வேண்டும் என்று தலைமைக் கழகத்தின் சார்பில் உங்கள் அனைவரையும் வேண்டிக் கேட்டுக் கொள்கின்றோம்!!!!
கருத்துகள்