கோயம்பேடு மார்க்கெட்டில் மேலும் ஒருவருக்கு கொரோனா.. சென்னையில் தொடரும் அதிர்ச்சி
சென்னை: சென்னையில் கோயம்பேட்டில் மேலும் ஒரு கூலித்தொழிலாளிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர் கோயம்பேடு சந்தையில் பணியாற்றினார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னையில்தான் அதிகமான நபர்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் 103 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்தமாக இதுவரை கொரோனா காரணமாக 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 121 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2058 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆக்ட்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 902 ஆக உயர்வு. அடுத்தடுத்த வீடுகள சென்னை நிலைமை இன்று 27 பேர் மட்டுமே தமிழகத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் நேற்று கணக்குப்படி ராயபுரத்தில் 158 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அதேபோல் தண்டையார்பேட்டையில் 66 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. திருவிக நகரில் 99 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அதேபோல் கோடம்பாக்கத்தில் 54 பேருக்கு ஏற்பட்டுள்ளது. கோடம்பாக்கம் நிலை இதில் கோடம்பாக்கத்தின் பகுதிக்கு கீழ்தான் கோயம்பேடு உள்ளது. தற்போது கோயம்பேடு பகுதியில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. கோயம்பேடு பகுதிகள் ஏற்கனவே 22 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.ந்த நிலையில் சென்னையில் கோயம்பேட்டில் மேலும் ஒரு கூலித்தொழிலாளிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோயம்பேடு நிலை கொரோனா பாதிக்கப்பட்டவர் கோயம்பேடு சந்தையில் பணியாற்றினார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் கோயம்பேடு பகுதியில் கடந்த ஒரு மாதமாக பணியாற்றி இருக்கிறார். இதனால் இவர் தொடர்பு கொண்ட நபர்களை எல்லாம் மாநகராட்சி நிர்வாகம் விசாரித்து வருகிறது. இவர் தொடர்பு கொண்ட காண்டாக்ட்கள் யார், இவர் பணியாற்றிய கடையில் யார் எல்லாம் பொருட்கள் வாங்கினார்கள் என்று விசாரிக்கப்பட்டு வருகிறது. மக்கள் நிலை இதோடு சென்னையில் மொத்தம் கோயம்பேடு மார்க்கெட்டில் 5 பணியாளர்களுக்கு கொரோனா வந்துள்ளது. இது அங்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக கோயம்பேட்டில் மொத்தம் 600 மொத்த விலை கடைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இந்த கடைகளின் எண்ணிக்கை மேலும் குறையும். அதேபோல் கோயம்பேடு பகுதிக்கும் வரும் மக்களின் எண்ணிக்கையும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்