கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மக்கள் சமூக விலகலை பின்பற்ற வேண்டும்.என சமூக சேவகர்.திரு எஸ்றா தங்கப்பாண்டி வேண்டுகோள் ....!

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் சேவாபாரத் சமூக நல அறக்கட்டளை சார்பாக 21.04.2020 அன்று covid-19 நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது அதில் 25 கிலோ அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, சமையல் மசாலா பொருட்கள் மற்றும்  உடல்நல பாதுகாப்பு  உபகரணங்களாகிய டெட்டால் லிக்யுடு , டெட்டால் சோப்பு , சானிடைசர் போன்றவைகள் இருந்தன


 


நிவாரண பறக்கும்படை குழுவின் பொறுப்பாளர் தாசில்தார் திரு பாலாஜி அவர்கள் இதனைத் தொடங்கி வைத்தார். Dr. அருள் கண்ணத் அவர்கள் கொரானா அறிகுறிகள் மற்றும் விழிப்புணர்வைப் பற்றி பேசினார். தலைமைக் காவலர் திரு.பவுன்ராஜ் அவர்கள் தடை உத்தரவு பற்றியும் அதை மீறாமல் இருக்கும் படியாகவும் பேசினார்.



 


 


சமூக சேவகர் திரு எஸ்றா தங்கப்பாண்டி அவர்கள் சமூக இடைவெளி அவசியம் குறித்து பேசி சமூக இடைவெளியை பின்பற்றும்படி அறிவுறுத்தினார். சமூக சேவகர் Dr. நாகராஜன் அவர்கள் அதில் கலந்துகொண்ட சுமார் 100 பேர்களுக்கு முகக் கவசங்கள் கொடுத்து கை கழுவுதல் அவசியம் பற்றி  பேசி அதை பின்பற்ற  வலியுறுத்தினார் சமூக சேவகரும் போதகருமாகிய  திரு மலைச்சாமி அவர்கள் நிவாரணப் பொருட்கள் வழங்கும் விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபத்தான நிலையில் மின்வயர் நடவடிக்கை எடுக்குமா ? மின்சார வாரியம் ,,,,

கூடலூர் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் அமைச்சர் கா.ராமச்சந்திரன்

,கூடலூர் சில்வர்கிளவுட், வனத்துறை சோதனை சாவடி அருகில் டெம்போ வேன் கவிழுந்து விபத்து.