இரண்டாவது முறையாக புதிய தமிழகம் கட்சி சார்பாக நிதி உதவி


இரண்டாவது முறையாக ரூ.1,00,000/- நிதி மற்றும் 1000 முகக் கவசங்கள் நிவாரணம் அளிப்பு!


உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் செவ்வனே செய்து வருகின்றன. கொரோனாவால் இந்தியா முழுமைக்கும் ஒரே நேரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. தொழில்கள், வணிகம், சேவை என அனைத்து துறைகளும் முடங்கிப் போய் உள்ளன. மத்திய, மாநில அரசுகள் ஒரு பக்கம் மருத்துவ ரீதியான தடுப்பு நடவடிக்கைகளும், இன்னொரு பக்கம் ஏழை, எளிய மக்களுக்கு பொருளாதார ரீதியாக உதவ வேண்டிய நிலையிலும் உள்ளன. 


இப்படிப்பட்ட சூழலில் அரசின் நடவடிக்கைகளுக்கு, பொது மக்களும் துணை புரிய வேண்டிய நிலையில் இருக்கின்றோம். ஏற்கனவே தாமரைத்தாய் கல்வி மற்றும் தொண்டு நிறுவனம், THAAMARAI WORLD SCHOOL மற்றும் சங்கீதா மருத்துவமனை சார்பாக பிரதமர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதிகளுக்கு ரூ.1,00,000/- நிதி அளிக்கப்பட்டது.  


இன்று இரண்டாவது முறையாக, புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி, MD, Ex.MLA அவர்கள் சார்பாக, தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியாக ரூ.1,00,000/-க்கான காசோலை மற்றும் 1000 முகக் கவசங்கள், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் திரு.இராசாமணி அவர்கள் முன்னிலையில், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்களிடம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் டாக்டர்.ரெ.ஓம்நாத் அவர்கள் உடன் இருந்தார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபத்தான நிலையில் மின்வயர் நடவடிக்கை எடுக்குமா ? மின்சார வாரியம் ,,,,

கூடலூர் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் அமைச்சர் கா.ராமச்சந்திரன்

,கூடலூர் சில்வர்கிளவுட், வனத்துறை சோதனை சாவடி அருகில் டெம்போ வேன் கவிழுந்து விபத்து.