கூனம்பட்டியில் வரையப்பட்ட கொரோனா விழிப்புணர்வு ஒவியம்....!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா கூனம்பட்டி பஞ்சாயத்தில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது .
கூனம்பட்டி பஞ்சாயத்து தலைவர் கோ.ராஜீ. ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நாளிலிருந்து பொதுமக்களுக்கு உதவின்ற பணியிலும் கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க (கிருமி நாசி தெளிதல் ,கபசுர நீர் வழங்கல்) போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக கூனம்பட்டி பஞ்சாயத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில் கொரோனா வைரஸ் ஓவியத்தை சாலையில் வரைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் .
தனித்திரு விழித்திரு , வீட்டிலேஇரு என்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன இதில் கொரோனாவின் கோர முகத்தை பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும்படி தத்ரூபமாக வரையப்பட்டு கொரோனாவின் நாக்கில் பாம்பு வரையப்பட்டு பாம்பை விட கொடிய விசத்தன்மை சேர்ந்தது .இந்த கொரொனா வைரஸ் என உணர்த்தப்பட்டுள்ளது .இந்த ஓவியத்தை மக்கள் வாட்ஸ்அப், பேஸ்புக், போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாக பார்த்து வருகின்றனர் .
கருத்துகள்