அதிகரிக்கும் டிக்டாக் மோகம்.. வீணாகும் நேரம்.. தீர்வு தான் என்ன ?
சென்னை : டிக்டாக் மீதுள்ள மோகத்தால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் நேரத்தை வீணாகி வருகின்றனர். கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கில் இருக்கும் அனைவரும் ஏதாவது பொழுதுபோக்கில் ஈடுபட்டு வருகின்றனர். நடிகை, நடிகர்கள் தன் அன்றாடம் செய்யும் வேலைகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அது அவர்களுக்கு பொழுது போக்காக மட்டும் செய்யாமல், அவர்கள் அழகையும், உடலையும் பாதுகாக்கும் விதமாக யோகா, உடற்பயிற்சி போன்ற நல்ல விஷயங்களை தொடர்ந்து மெனக்கெட்டு செய்து வருகின்றனர். இதில் பொதுநலமும், சுயநலமும் கலந்த ஒரு விஷயமாக கருதப்படுகிறது.
வீட்டில் இருக்கும் பல குடும்பங்களின் இந்த பொக்கிஷமான நேரத்தை டிக் டாக் செய்து வெட்டியாக கழிக்கின்றனர். பல ஊடகங்கள் டிக் டாக்கினால் வரும் பிரச்சனைகளை பல முறை எடுத்து சொல்லியும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டிக் டாக் மீது உள்ள அடிக்ஷன் மாறவும் இல்லை தீரவும் இல்லை, ஏதோ ஒரு இனம் புரியாத பரவசமும், மனதளவில் ஏற்படும் ஒரு குதூகலமும் அவர்களை மீண்டும் மீண்டும் டிக் டாக்கிற்கு அடிமையாக்குகிறது. பெரியவர்கள் தான் இதற்கு அடிமை என்று நினைத்தால் குழந்தைகளையும் இந்த மாதிரியான பொழுது போக்கில் ஈடுபட செய்வது மிகவும் வருத்தத்திற்குரியது.
நடிகர்கள் பேசி நடித்த வசனங்களையும், பாடல்களையும் குடும்பத்துடன் சேர்ந்து ஒட்டு மொத்தமாக நடிப்பது சில நேரங்களில் மனோரீதியான பாதிக்க பட்ட மனிதர்களோ என்று என்ன தோன்றுகிறது. சிலர் மிக கொடுமையாக ஆபாசமாகவும் டிக் டாக் செய்கின்றனர். அந்த மாதியான பதிவுகளை தவிர்ப்பது நல்லது. டிக் டாக் மூலம் வெகு சிலர் கொஞ்சம் பிரபலம் ஆனது உண்மை தான். ஆனால் நீண்ட காலம் அவர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. டிக் டாக்கினால் உண்டான பிரபலங்களை விட ப்ராப்லங்களே அதிகம். அதனால் வெட்டியாக இதில் நேரம் கழிக்காமல் பெற்றோர்கள் நல்ல நல்ல விஷயங்களை குழந்தைகளுக்கு கற்று தரலாம்
புத்தகம் படிப்பது, கிரியேட்டிவ்வாக யோசிப்பது படம் வரைவது, கதை சொல்வது, வாழ்க்கையின் அடிப்படை விஷயங்களை குழந்தைக்கு கற்றுத்தரலாம். உடற்பயிற்சி ,யோகா,உணவு கட்டுப்பாடு, வீட்டில் இருந்த படியே விளையாடும் விளையாட்டுகளையும் நம் குழந்தைகளுக்கு கற்றுத்தரலாம். இப்படி செய்வதன் மூலம் குழந்தைகள் தீய விஷயத்தை தவிர்ப்பார்கள். டிக் டாக் செய்பவர்கள் அனைவரும் தவறானவர்கள் என்று பொருள் இல்லை. சினிமா பிரபலங்களும் கூட இதனை செய்கிறார்கள் ஆனால் முழு நேர வேலையாக யாரும் செய்வது இல்லை. பொழுதுபோக்கிற்காக மட்டும் செய்து நம் நலம் கருதுவது மிகவும் முக்கியம்.
கருத்துகள்