கூனம்பட்டி பஞ்சாயத்தில் கபசுர குடிநீர் வழங்கல்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா கூனம்பட்டி பஞ்சாயத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாத்து கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர நீர் வழங்கப்பட்டது
கூனம்பட்டி பஞ்சாயத்து தலைவர் கோ.ராஜீ அவர் பொதுமக்களுக்கு உதவின்ற பணியிலும் கொரோனாவில்.
இருந்து மக்களை பாதுகாக்கும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் .
இதன் ஒரு பகுதியாக கூனம்பட்டி பஞ்சாயத்தில் உள்ள மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க. கபசுர. குடிநீரை பொது மக்களுக்கு வழங்குகிறார். அனைவரும் பாதுகாப்போடு இருக்க வேண்டும் என்றும் ,வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். உடன் பஞ்சாயத்து செயலாளர் ராமர்.துப்புரவு பணியாளர் கண்ணன்,குமாரசாமி ,மற்றும் பலர் பங்கேற்றனர்.
கருத்துகள்