இந்த கொரோனா காலத்திலும் கசமுசா மசாஜா.. ரெய்டு வந்த போலீஸ்.. தப்பி ஓடிய பெண்கள்!

திருச்சி: மசாஜ் என்ற பெயரில் கசமுசா வேலைகளும் நடந்துள்ளன.. அத்துடன் ஊரடங்கின்போது மசாஜ் சென்டரை திறந்து வைத்து உட்கார்ந்திருந்தனர் பெண்கள்.. போலீஸை பார்த்ததும் இவர்கள் தலைதெறிக்க தப்பித்து ஓட்டம் பிடித்த சம்பவம் திருச்சியை திகைக்க வைத்துள்ளது!! இந்தியாவில் கொரோனாவைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது.. லாக்டவுன் போடப்பட்டு உள்ளதால் மக்கள் அதற்கு கட்டுப்பட்டு வீடுகளில் முடங்கி உள்ளனர். 14-ம் தேதியுடன் இந்த ஊரடங்கு முடிவடைந்தாலும் தொற்று பரவல் காரணமாக, இந்த ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30 வரை நீட்டிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அதுகுறித்த ஆலோசனைகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது எனினும், அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக பால், காய்கறி, மளிகை போன்றவைகள் மட்டும் விற்க அனுமதி தரப்பட்டுள்ளது.


. இந்நிலையில் அரசின் எச்சரிக்கையையும் மீறி திருச்சி உறையூரில் ஒரு மசாஜ் சென்டர் மூடப்படாமல் இயங்கி வந்துள்ளது. இது ஒரு ஆயுர்வேத மசாஜ் சென்டர் போலும்.. அதில் ஆண்கள், பெண்கள் என ஒரு சிலர் சென்று மசாஜ் சென்டருக்கு செய்து மசாஜ் செய்து வந்ததாக அப்பகுதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மசாஜ் என்ற பெயரில் சில முறைகேடான செயல்களும் நடப்பதாக புகார்கள் வந்தன... இதையடுத்து, அந்த மசாஜ் சென்டருக்குள் அதிரடியாக அதிகாரிகள் நுழைந்தனர்.. அப்போது 2 பெண் ஊழியர்கள், ஒரு சில கஸ்டமர்களும் மசாஜ் சென்டரில் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர்களை விசாரித்து கொண்டிருந்தபோதே, அங்கிருந்த பெண் ஊழியர்கள் திடீரென தப்பி ஓடிவிட்டனர். ஊரடங்கை மீறி, குறிப்பிட்ட லைசன்ஸ் இல்லாமல் அந்த மசாஜ் சென்டரை நடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் வெளிமாநில இளம்பெண்களை வைத்து மசாஜ் என்ற பெயரில் சிலமுறைகேடான செயல்கள் நடந்து வந்ததும் தெரியவந்தது. பின்னர் அந்த சென்டருக்கு உடனடியாக சீல் வைக்கப்பட்டுள்ளது.. இந்த மசாஜ் சென்டர் நடத்தி வந்தவர் யார் என்ற விசாரணையும் முடுக்கி விடப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு நேரத்தில் இப்படி திருச்சி நகரிலேயே மசாஜ் சென்டர் இயங்கிவந்தது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபத்தான நிலையில் மின்வயர் நடவடிக்கை எடுக்குமா ? மின்சார வாரியம் ,,,,

கூடலூர் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் அமைச்சர் கா.ராமச்சந்திரன்

,கூடலூர் சில்வர்கிளவுட், வனத்துறை சோதனை சாவடி அருகில் டெம்போ வேன் கவிழுந்து விபத்து.