கோயம்பேடு சந்தையில் நிறைய கடைகளுக்கு பரவியது.. ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா!

சென்னை: கோயம்பேடு சந்தையில் 9 பேருக்கு இன்று மட்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் 98 சதவீதம் பேருக்கு அறிகுறி இல்லாமல் கொரோனா சென்னையில் கொரோனா நாளுக்கு நாள் தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. சென்னையிலும் இன்றுதான் இதுவரை ஏற்பட்டதிலேயே அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


சென்னையில் 138 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்று மொத்தம் 906 பேருக்கு ஏற்பட்டுள்ளது. சென்னையில் கோயம்பேடு பகுதியில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. சென்னை மக்களை இது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஒரே நாளில் மிக அதிக பாதிப்பு.. 161 பேருக்கு… கோயம்பேடு எப்படி சென்னையில் கோயம்பேடு பகுதியில் ஏற்கனவே 32 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு இருக்கும் கோடம்பாக்கம் மண்டலத்தில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. கோடம்பாக்கத்தில் 63 பேருக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். சென்னையில் மொத்தம் கோயம்பேடு மார்க்கெட்டில் 5 பணியாளர்களுக்கு கொரோனா வந்துள்ளது.


காண்டாக்ட் டிரேசிங் அதிர்ச்சி இந்த நிலையில் கோயம்பேட்டில் கொரோனா ஏற்பட்ட இவர்கள் யாரை எல்லாம் தொடர்பு கொண்டார்கள் என்று காண்டாக்ட் டிரேசிங் செய்யப்பட்டது. இந்த காண்டாக்ட் டிரேசிங் பெரிய அளவில் அதிர்ச்சி அளித்துள்ளது. இந்த டிரேசிங்கின் முடிவில் மொத்தம் 50+ பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்கள் எல்லோருக்கும் இன்று கொரோனா சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையின் முடிவில் 9 பேருக்கு கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா உறுதி செய்யப்பட்டது.  போலீஸ் அதிகாரி அதில் கோயம்பேடு மார்க்கெட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த போலீசார் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டு உள்ளது.


அங்கு கொரோனா பாதிக்கப்பட்ட நபர் இருந்த கடைக்கு அருகிலேயே இவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கிறார். இதன் மூலம் அவருக்கு கொரோனா பரவி உள்ளது. அதேபோல் அங்கு இருக்கும் பழக்கடை ஒன்றில் 3 ஆண்களுக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. பழக்கடை கொரோனா அந்த பழக்கடையில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் இருக்கும் இன்னொரு பிரபலமான பழக்கடையிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த கடையில் இரண்டு பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அருகே இருக்கும் பூக்கடை ஒன்றில் 3 பேருக்கு கொரோனா ஏற்பட்டு உள்ளது. கடையின் உரிமையாளர், அவரின் மகன் மற்றும் அவரின் மனைவி மூன்று பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.


கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு… தீவிரம் அடையும் அச்சம் இதன் மூலம் கோயம்பேட்டில் கொரோனா தீவிரம் அடையும் என்று அச்சம் எழுந்துள்ளது. இதனால் இந்த கடைகளுக்கு சென்ற நபர்களை எல்லாம் மாநகராட்சி நிர்வாகம் விசாரித்து வருகிறது. இவர் தொடர்பு கொண்ட காண்டாக்ட்கள் யார், இவர் பணியாற்றிய கடையில் யார் எல்லாம் பொருட்கள் வாங்கினார்கள் என்று விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த கடைகளுக்கு மக்கள் அதிக அளவில் சென்று இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.



 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபத்தான நிலையில் மின்வயர் நடவடிக்கை எடுக்குமா ? மின்சார வாரியம் ,,,,

கூடலூர் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் அமைச்சர் கா.ராமச்சந்திரன்

,கூடலூர் சில்வர்கிளவுட், வனத்துறை சோதனை சாவடி அருகில் டெம்போ வேன் கவிழுந்து விபத்து.