தீவிர வேகம் எடுக்கும் கொரோனா.. சென்னையில் தோல்வி அடைந்த முயற்சிகள்.. எங்கே சறுக்கியது? என்ன நடந்தது?

சென்னை: சென்னையில் கொரோனா வேகம் குறைவதற்கு பதிலாக அதிக வேகத்துடன் பரவி வருகிறது. சென்னையில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன் காஞ்சிபுரத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதன்பின் ஒருவருக்கு சென்னையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக சென்னையில் வேகம் எடுத்து வந்த கொரோனா இன்று தீவிரம் அடைந்துள்ளது. இதுவரை சென்னையில் ஏற்பட்ட கொரோனா கேஸ்களில் இன்றுதான் அதிக அளவில் கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


சென்னையில் முதல் முறை ஒரே நாளில் 100க்கும் அதிகமான நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.' ஆதாரம் இல்லை.. கொரோனாவிற்கு பிளாஸ்மா தெரபி அளிப்பதா?.. எச்சரிக்கும் மத்திய அரசு.. புதிய சிக்கல்! சென்னையின் இன்றைய நிலை தமிழகத்தில் இன்று மட்டும் 121 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2058 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் 103 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்தமாக இதுவரை கொரோனா காரணமாக 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தினமும் ஏற்படும் கொரோனா கேஸ்களில் சென்னையில்தான் 90% கேஸ்கள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.


குறைவதற்கு பதிலாக தீவிரம் தமிழகத்தில் ஒரு மாதத்திற்கும் அதிகமாக ஊரடங்கு உள்ளது. ஊரடங்கு காரணமாக கொரோனா பாதிப்பு குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா குறைவதற்கு பதில் சென்னையில் கொரோனா வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடங்கி மருத்துவர்கள் வரை பலரை இது குழப்பம் அடைய வைத்துள்ளது. இதற்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது. மக்கள் தொகை எப்படி சென்னையில் கொரோனா கேஸ்கள் இப்படி அதிகரிக்க மக்கள் தொகை முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. சென்னையில் மட்டும் 1.5 கோடி பேர் வசிக்கிறார்கள். உலகம் முழுக்க இப்படி கோடிக்கணக்கில் மக்கள் வசிக்கும் இடங்களில் எல்லாம் கொரோனா அதிகமாக பரவி உள்ளது. அப்படிப்பட்ட நகரங்களுடன் ஒப்பிட்டால் சென்னையில் குறைவான கேஸ்கள்தான் உள்ளது. ஆனாலும் சென்னையில் வரும் நாட்களில் இந்த மக்கள் தொகை காரணமாக கேஸ்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.


சரியான காண்டாக்ட் டிரேஸ் இல்லை இந்த அதிக மக்கள் தொகை காரணமாக சென்னையில் காண்டாக்ட் டிரேஸ் செய்வது மிகவும் கடினமாக மாறியுள்ளது. சென்னையில் ஒரு நாள் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டால், அவருக்கு எப்படி கொரோன ஏற்படுகிறது என்பதை கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக உள்ளது. கொரோனா தொற்று எப்படி ஏற்பட்டது என்பதை கன்டுபிடிக்கும் காண்டாக்ட் டிரேசிங் பெரிய சிரமமான விஷயமாக மாறியுள்ளது. இதில் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


ஒரே பகுதி அதேபோல் சென்னையில் ஹாட் ஸ்பாட் பகுதிகளில்தான் தொடர்ந்து கொரோனா கேஸ்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. சென்னையில் புதிதாக ஹாட் ஸ்பாட் கேஸ்கள் எங்கும் ஏற்படவில்லை. ஹாட் ஸ்பாட் பகுதிகளான ராயபுரம், கோயம்பேடு, தேனாம்பேட்டை, திருவிக நகர் ஆகிய பகுதிகளில்தான் தொடர்ந்து கேஸ்கள் அதிகரித்து வருகிறது. சில இடங்களில் ஒரே தெருவில் கூட 20-30 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மார்க்கெட் எப்படி அதேபோல் சென்னையில் வடசென்னை பகுதியில் பலருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மேலும் சென்னையில் கோடம்பாக்கம் மண்டலத்திற்கு கீழே வரும் கோயம்பேடு பகுதியிலும் 30 பேருக்கும் மேல் கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு கோயம்பேடு மார்க்கெட்டிலேயே பலருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இவர்கள் மூலம் அங்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்கிய பலருக்கு கொரோனா ஏற்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மக்களின் பேனிக் பையிங் அதேபோல் சென்னையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் அச்சம் காரணமாக மொத்தமாக வெளியே வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவித்தனர். இப்படி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பேனிக் பையிங் செய்தது பெரிய பிரச்சனை ஆனது. இப்படி பேனிக் பையிங் நடந்தது மூன்று நாட்களிலேயே இத்தனை பேருக்கு சென்னையில் கொரோனா ஏற்பட்டுள்ளது


. சரியான திட்டமிடல் இல்லை இதற்கு முக்கிய காரணம் சரியான திட்டமிடல் இல்லை என்பதுதான் என்கிறார்கள். எந்த பகுதிகளை பிரிப்பது ? எப்படி கண்டெயின்மெண்ட் பகுதி அமைப்பது? என்று சரியான திட்டமிடல் இல்லை. தமிழகத்தின் மற்ற மாவட்டங்கள் கொரோனாவை கட்டுப்படுத்தி வரும் நிலையில் சென்னை இப்படி தோல்வி அடைய இதுதான் காரணம் என்று கூறுகிறார்கள். முக்கியமாக சென்னையின் ரெட் சோன் பகுதிகளில் சரியான கட்டுப்பாடுகள் இல்லை. அலட்சியமான மக்கள் அதேபோல் அரசு மட்டுமின்றி மக்களும் இதற்கு பெரிய அளவில் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் சரியாக தனிமனித விலகலை கடைபிடிக்கவில்லை. போதுமான அளவில் மக்கள் தனி மனித இடைவெளியை கடைபிடிக்காத காரணத்தால், அடிக்கடி வெளியே செல்வதால், சரியாக ஊரடங்கை பின்பற்றாத காரணத்தால் கேஸ்களில் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்கிறார்கள்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபத்தான நிலையில் மின்வயர் நடவடிக்கை எடுக்குமா ? மின்சார வாரியம் ,,,,

கூடலூர் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் அமைச்சர் கா.ராமச்சந்திரன்

,கூடலூர் சில்வர்கிளவுட், வனத்துறை சோதனை சாவடி அருகில் டெம்போ வேன் கவிழுந்து விபத்து.