கொரோனாவுக்கு திருச்சியின் முதல் வெற்றி.. குணமடைந்தார் ஈரோடு இளைஞர்.. மருத்துவர்கள் நெகிழ்ச்சி

திருச்சி: கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு இளைஞர் (24) வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.15 மணியளவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.


 



     

    கொரோனாவுக்கு திருச்சியின் முதல் வெற்றி.. குணமடைந்தார் ஈரோடு இளைஞர்

    தமிழகத்தில் 834 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் 36 பேருக்கு கொரோனா பரவி உள்ளது.


    இந்நிலையில் துபையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்த இவருக்கு மாரச் 22 ஆம் தேதி கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்ததால் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவருக்கு மார்ச் 24 ஆம் தேதி நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர் குணமடைந்து வெள்ளிக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.


     

     

    திருச்சியின் முதல் நோயாளியும் இவரே. முதலில் குணமடைந்தவரும் இவரே என்பது தான் சிறப்பு. தன்னுயிரை துச்சமென நினைத்து, அரிய சேவையாற்றி வரும் மருத்துவக் குழுவினருக்கும், திருச்சி மாவட்ட கொரோனா தடுப்புக் குழுவினருக்கும் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.


     


     






    •  







    கருத்துகள்

    இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

    ஆபத்தான நிலையில் மின்வயர் நடவடிக்கை எடுக்குமா ? மின்சார வாரியம் ,,,,

    கூடலூர் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் அமைச்சர் கா.ராமச்சந்திரன்

    ,கூடலூர் சில்வர்கிளவுட், வனத்துறை சோதனை சாவடி அருகில் டெம்போ வேன் கவிழுந்து விபத்து.