கொரோனா தொற்று- இந்தியா மிக முக்கியமான கட்டத்தில் இன்று நுழைகிறது: ப. சிதம்பரம்
சென்னை: கொரோனா தொற்று பரவுவதில் இந்தியா இன்று மிக முக்கியமான கட்டத்தில் நுழைகிறது என்று மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ப.சிதம்பரம் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: கொரோனா பரவுவதில் இந்தியா இன்று மிக முக்கியமான கட்டத்தில் நுழைகிறது.
எதிர்க் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் கலந்தாலோசித்ததை எல்லோரும் வரவேற்கிறோம். எல்லா வல்லுநர்களும் ஒரு முகமாக ஏற்றுக் கொள்ளும் கருத்து: மிகப் பரவலாக, மிக அவரமாக, மிக வேகமாக பரிசோதனை (testing) செய்ய வேண்டும். இதனை அரசு இன்றே தொடங்கவேண்டும்.
எல்லா மாநிலங்களுக்கும் முன் உதாரணமாக தமிழ்நாடு அரசு இந்தப் பரவலான அதிகமான பரிசோதனைத் திட்டத்தை இன்றே தொடங்கவேண்டும். இவ்வாறு ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
கருத்துகள்