42 பேரையும் அடுத்தடுத்து டிஸ்சார்ஜ் செய்த கரூர்.. எல்லோரும் குணம்.. எப்படி சாதித்தது?
கரூர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக கரூர் உருவெடுத்து உள்ளது. மிக வேகமாக சிகிச்சை மூலம் கரூர் இந்த சாதனையை செய்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்து வருகிறது. அதே சமயம் இன்னொரு பக்கம் தமிழகத்தில் குணப்படுத்தப்படும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. \
தமிழகத்தில் இன்று மேலும் 161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தமாக தமிழகத்தில் 2323 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையிலும் இன்றுதான் இதுவரை ஏற்பட்டதிலேயே அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் 138 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்று மொத்தம் 906 பேருக்கு ஏற்பட்டுள்ளது. கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா..
சென்னையில் இன்று மட்டும் 138 பேர் பாதிப்பு.. மக்கள் அதிர்ச்சி!! கொரோனா இல்லாத மாவட்டம் தமிழகத்தில் ஏற்கனவே கிருஷ்ணகிரியில் கொரோனா பாதிப்பு இல்லை. தமிழகத்தில் கொரோனா பாதிப்பே ஏற்படாத மாவட்டமாக கிருஷ்ணகிரி மாறியுள்ளது. இன்னொரு பக்கம் இரண்டு நாட்களுக்கு முன்பே ஈரோட்டில் கொரோனா பாதிக்கப்பட்ட எல்லோரும் குணப்படுத்தப்பட்டனர். அதோடு இன்று நீலகிரியில் கொரோனா நோயாளிகள் எல்லோரும் குணப்படுத்தப்பட்டனர் . கரூர் எப்படி இந்த நிலையில் தற்போது கரூரிலும் கொரோனா நோயாளிகள் எல்லோரும் குணப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள் கரூரில் நேற்று வரை 41 நோயாளிகள் குணப்படுத்தப்பட்டனர். இன்று மேலும் ஒரு நோயாளி குணப்படுத்தப்பட்டனர். இதன் மூலம் கரூரில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட 42 பேரும் குணப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டவர்களில் அதிகமான நபர்களை டிஸ்சார்ஜ் செய்து கரூர் அரசு மருத்துவமனை புதிய சாதனை படைத்துள்ளது. அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ஆம் தமிழகத்தின் மிக சிறந்த மருத்துவமனையாக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மாறியுள்ளது. ஏனென்றால் வெறும் இரண்டு வாரத்தில் இங்கு இருக்கும் கொரோனா நோயாளிகள் எல்லோரும் குணப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
கரூரில் இப்படி சிகிச்சை அளித்து குணமான பலர் அண்டை மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கரூரில் மொத்தம் 120 பேர் கரூரில் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று சாதனை செய்தது இன்று கடைசியாக ஒரு பெண் கரூர் மருத்துவமனையில் இருந்து குணப்படுத்தப்பட்டார். இதன் மூலம் அந்த மாவட்டம் கொரோனா ஃபிரி மாவட்டமாக மாறியுள்ளது. இரண்டே வாரத்தில் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இந்த சாதனையை செய்துள்ளது. மிக சரியாக திட்டமிடல் மூலம் கரூர் இந்த சாதனையை செய்துள்ளது. முக்கியமாக கொரோனா காரணமாக தொடக்கத்திலேயே கரூர் அரசு மருத்துவமனையில் பெட்கள் தயார் செய்யப்பட்டு இருந்தது. பணிகள் ஒப்பந்த அடிப்படையில் புதிய பணியாளர்களை நியமித்து பணிகளை பிரித்துக் கொடுத்தனர்.
இதன் மூலம் அங்கு பணிகளை விரிவாக செய்தனர். மருத்துவர்களுக்கு சரியாக ஓய்வு கொடுத்து முறையாக பணிகளை மேற்கொள்ள வைத்தனர். அண்டை மாவட்டங்களான சேலம், திருப்பூர், நாமக்கல், திருச்சியில் இருந்து பலர் இங்கே வந்து சிகிச்சை பெற்றனர். எல்லோருக்கும் இங்கு மொத்தமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த ஒரு ஏசி தான் கொரோனாவை பரப்பும்.. தப்புவது எப்படி? டிப்ஸ் அரசு மருத்துவர்கள் ஹீரோ இந்த சாதனைக்கு முழுக்க முழுக்க சொந்தக்காரர்கள் கரூர் அரசு மருத்துவமனை பணியாளர்கள் மட்டும்தான். கொரோனா தாக்குதல் ஏற்பட்டால் உடனே மிக துரிதமான சிகிச்சை அளித்து சரியான கண்காணிப்பு கொடுத்து நோயாளிகளை குணப்படுத்தி உள்ளனர். நோயாளிகளின் உணவு முறையில் தீவிரமாக கவனம் செலுத்தி இருக்கிறார்கள். அந்த மாவட்ட ஆட்சியர் அன்பழகனின் சரியான திட்டமிடலும், ஆதரவும்தான் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பெரிய அளவில் ஊக்குவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்