தமிழகத்தில் சொத்து வரி, குடிநீர் வரி செலுத்த 3 மாதம் அவகாசம்!

சென்னை: தமிழகத்தில் சொத்து வரி, குடிநீர் வரி செலுத்த 3 மாதம் அவகாசம் அளித்து தமழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 24ம் தேதி முதல் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வேலைக்கு செல்லாமல் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்க கிடக்கிறார்கள். இதனால் பலர் வறுமையில் சிக்கி தவிக்கிறார்கள். தொழில்கள் முடங்கி கிடக்கின்றன. மொத்தமாக தமிழகம் ஸ்தம்பித்து போய் கிடக்கிறது. இதனால் தமிழக அரசு தமிழகத்தில் சொத்து வரி, குடிநீர் வரி செலுத்த 3 மாதம் அவகாசம் அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை உள்பட அனைத்து உள்ளாட்சி பகுதிகளிலும், சொத்து வரி, குடிநீர் வரியை எந்த வித அபாராதமும் இன்றி ஜுன் 30ம் தேதி வரை செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபத்தான நிலையில் மின்வயர் நடவடிக்கை எடுக்குமா ? மின்சார வாரியம் ,,,,

கூடலூர் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் அமைச்சர் கா.ராமச்சந்திரன்

,கூடலூர் சில்வர்கிளவுட், வனத்துறை சோதனை சாவடி அருகில் டெம்போ வேன் கவிழுந்து விபத்து.