சென்னையின் 3 மோசமான "சோன்கள்".. இன்று மட்டும் 35 கேஸ்கள் எப்படி வந்தது என்றே தெரியவில்லை..

சென்னை: சென்னையில் இன்று கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களில் 35 பேருக்கு எப்படி கொரோனா வந்தது என்றே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 121 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2058 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் 103 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்தமாக இதுவரை கொரோனா காரணமாக 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தினமும் ஏற்படும் கொரோனா கேஸ்களில் சென்னையில்தான் 90% கேஸ்கள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களில் 35 பேருக்கு எப்படி கொரோனா வந்தது என்றே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் இப்படி தினமும் காண்டாக்ட் இல்லாத கேஸ்களில் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. காண்டாக்ட் இல்லாத கேஸ்கள் என்றால், ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டு, அவருக்கு எப்படி கொரோனா ஏற்பட்டது என்று கண்டுபிடிக்க முடியாமல் போனால் அதுதான் காண்டாக் லெஸ் கேஸ்கள். சென்னையில் தொடர்ந்து பதிவாகிறது இப்படி யார் மூலம் ஒருவருக்கு கொரோனா வந்தது என்று கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டால், அது பெரிய ஆபத்தாக முடியும்.


இது போன்ற சூழ்நிலை ஏற்பட்டால் கொரோனா பரவலை தடுப்பது மிகவும் கடினம் ஆகும். இப்படி காண்டாக்ட் இல்லாத கேஸ்கள் சென்னையில் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த 5 நாட்களாக 10, 7, 6, 10, 4 என்று வரிசையாக காண்டாக்ட் இல்லாத கேஸ்கள் சென்னையில் பதிவானது குறிப்பிடத்தக்கது. ஒரே நாளில் முடிஞ்சு போச்சு.. அவள் உடலை… இன்று மிக மோசம் இன்று காண்டாக்ட் இல்லாத கேஸ்களில் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. அதாவது ஒரே அடியாக 35 பேருக்கு தமிழகத்தில் எப்படி கொரோனா வந்தது என்றே தெரியாத நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. சென்னையில் இப்படி பரவும் கொரோனா கேஸ்களில் இன்னொரு கவனிக்க வேண்டிய விஷயமும் உள்ளது.


சென்னையில் வடசென்னை பகுதியில்தான் அதிகமாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 3 மண்டலத்தில் அதிகம் முக்கியமாக சென்னையில் 3 மண்டலங்கள் மிக மோசமாக கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் இருக்கும் ராயபுரம், தண்டையார்பேட்டை, மற்றும் திருவிக நகரில்தான் மிக மோசமாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றைய கணக்குப்படி சென்னையில் ஏற்பட்ட கொரோனா கேஸ்களில் 55% கொரோனா கேஸ்கள் இந்த மூன்று பகுதிகளில் இருந்துதான் வந்துள்ளது.


13 வயசு பையனுக்கு.. தன் நிர்வாண போட்டோவை… அதிகமாக ராயபுரம் நேற்று கணக்குப்படி ராயபுரத்தில் 158 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அதேபோல் தண்டையார்பேட்டையில் 66 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. திருவிக நகரில் 99 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று மொத்தம் 103 பேருக்கு சென்னையில் கொரோனா வந்துள்ளது. இதன் மண்டல வாரியான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்த விவரம் இன்று இரவு வெளியிடப்படும். அதிகாரிகள் மீட்டிங்கில் எடப்பாடியார் செம அப்செட் மொத்தமாக லாக் செய்ய வேண்டும் சென்னையில் இந்த மூன்று மண்டலங்களில் கொரோனாவை கட்டுப்படுத்தினால் பெரிய அளவில் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக மூன்று மண்டலங்களை அப்படியே லாக் செய்ய வேண்டும். மக்களை அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட வெளியே அனுப்பாமல் கட்டுப்படுத்தினால் மட்டுமே, இங்கு கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபத்தான நிலையில் மின்வயர் நடவடிக்கை எடுக்குமா ? மின்சார வாரியம் ,,,,

கூடலூர் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் அமைச்சர் கா.ராமச்சந்திரன்

,கூடலூர் சில்வர்கிளவுட், வனத்துறை சோதனை சாவடி அருகில் டெம்போ வேன் கவிழுந்து விபத்து.