2 குழந்தைகள் உட்பட 11 பேருக்கு கொரோனா.. அதிர்ந்த மயிலாப்பூர்.. என்ன நடந்தது?

சென்னை: மயிலாப்பூரில் ஒரே தெருவில் அடுத்தடுத்து உள்ள வீடுகளில் மொத்தம் 11 பேருக்கு கொரோனா ஏற்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் 103 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்தமாக இதுவரை கொரோனா காரணமாக 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தினமும் ஏற்படும் கொரோனா கேஸ்களில் சென்னையில்தான் 90% கேஸ்கள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. சென்னையில்தான் தமிழகத்தில்தான் அதிகமான நபர்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 121 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2058 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் மயிலாப்பூரில் ஒரே தெருவில் அடுத்தடுத்து உள்ள வீடுகளில் மொத்தம் 11 பேருக்கு கொரோனா ஏற்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு இருக்கும் குடிசை பகுதி ஒன்றில் இப்படி வரிசையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த குடிசை பகுதியில் 6 மாதம் குழந்தை ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் 1 வயது குழந்தை ஒன்றுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மொத்தம் எத்தனை பேர் இது போக மேலும் 10 பேருக்கு கொரானோ பாதிப்பு உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் 5 பெண்கள் அடக்கம். இதன் மூலம் அந்த பகுதி மொத்தமாக ரெட் சோன் பகுதியாக மாறியுள்ளது. அங்கு இருக்கும் சாலைகள் எல்லாம் மூடப்பட்டுள்ளது. மொத்தமாக வீடு வீடாக உள்ள பகுதிகளில் சோதனைகள் செய்யப்பட உள்ளது. அங்கு கொரோனா அறிகுறி உள்ளவர்கள் 25 பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சென்னை பாடிக்குப்பம் நேற்று இதேபோல் சென்னையில் பாடிக்குப்பம் அங்காளம்மன் கோவில் தெருவில் அடுத்தடுத்த வீடுகளில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படடுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இந்த பகுதி கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்கு அருகிலேயே உள்ளது. கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்கு சென்ற நபர் மூலம் இங்கு கொரோனா பரவி இருக்கலாம் அஞ்சப்படுகிறது. இங்குதான் அடுத்தடுத்து 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை காவல் நிலையம் அதேபோல் சென்னையில் நுங்கம்பாக்கத்தில் காவல் நிலையத்தில் வரிசையாக இன்று 4 நான்கு காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் இன்று காலை முதல்நிலை காவலருக்கும், உளவுத்துறை காவலருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அதை தொடர்ந்து மேலும் இரு காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபத்தான நிலையில் மின்வயர் நடவடிக்கை எடுக்குமா ? மின்சார வாரியம் ,,,,

கூடலூர் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் அமைச்சர் கா.ராமச்சந்திரன்

,கூடலூர் சில்வர்கிளவுட், வனத்துறை சோதனை சாவடி அருகில் டெம்போ வேன் கவிழுந்து விபத்து.