வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில்  கொரோனா வைரஸ் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்!


*திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில்  கொரோனா வைரஸ் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்*


 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள்  மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் அவர்களின் தலைமையில் வாணியம்பாடி துணை கண்காணிப்பாளர் பலா கிருஷ்ணன், காவல் ஆய்வாளர் சந்திரசேகர், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கயா பாண்டி ,கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியம்,   மற்றும்  திருப்பத்தூர் மாவட்டத்தில் உட்பட்ட அனைத்து வட்டாட்சியர்கள்,   வருவாய்த்துறையினர், கிராம நிர்வாக அலுவலர்கள், ஆகியோர் கலந்துகொண்டு கொரோனா  வைரஸ் குறித்த விழிப்புணர்வு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில்  பேசிய மாவட்ட ஆட்சியர் மக்களுக்கு இந்த நோயிலிருந்து எப்படி பாதுகாப்பது பற்றி அவர்கள் வெளியே வரும்போது அவர்களை எப்படி நமது பணியாளர்கள் கண்காணிப்பது என்பதையும் தேவைப்பட்டால் அவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வீடு வீடாகச் சென்று வழங்குவோம் இவ்வாறு செய்தியாளரிடம் கூறினார்.


*வாணியம்பாடி டெவலப்மெண்ட் சொசைட்டி மற்றும் எம். எஸ். ஐ .பயோ டெக் நிறுவனம் சார்பாக ஹன் வாஷ் இலவசமாக வழங்கப்பட்டது*   


ஐ ஜின் என்கிற     ஹன் வாஷ்  தற்போது வாணியம்பாடி பகுதியிலேயே தயாரித்து வரும் எம்.எஸ்.எய்  பயோ டெக்  நிறுவனத்தின் உரிமையாளர்  அஜ்மல் ஹுசைன் மற்றும் வசியுல்லா  இணைந்து அரசு அதிகாரிகள்  காவல்துறை உயர் அதிகாரிகளும்,  பொதுமக்களுக்கும்,சுமார் 500 பாட்டில்கள் வழங்கப்பட்டன.


இவர்களுடன் மாவட்ட     சிறுபான்மை நலத்துறை கருத்தாளர் ஜீஷான் அக்பர்   உடனிருந்து இந்த சமூக சேவை செய்து வந்தார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபத்தான நிலையில் மின்வயர் நடவடிக்கை எடுக்குமா ? மின்சார வாரியம் ,,,,

கூடலூர் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் அமைச்சர் கா.ராமச்சந்திரன்

,கூடலூர் சில்வர்கிளவுட், வனத்துறை சோதனை சாவடி அருகில் டெம்போ வேன் கவிழுந்து விபத்து.