கொரோனா அலர்ட்: இந்த பொருட்களை அதிக விலைக்கு விற்றால்.! இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!


  1. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக், திரையரங்குகள் உள்ளிட்டவற்றை மார்ச் 31 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

    கொரோனா பாதுகாப்பு எச்சரிக்கையாக மக்கள் சானிட்டைசர், முக கவசங்கள் போன்ற மருத்துவ பொருட்களை வாங்க கடைகளில் அலை மோதுகின்றனர். இதை சாதகமாக கொண்டு பல கடைகள் மருந்து பொருட்களை பதுக்குவதாகவும், அதிக விலைக்கு விற்பதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.இந்நிலையில் சானிட்டைசர், கை கழுவும் சோப், முக கவசம் போன்ற அத்தியாவசிய மருந்து பொருட்களை அதிக விலைக்கு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மீறி அதிக விலைக்கு விற்பவர்கள் குறித்து மக்கள் மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 044 - 24321438 என்ற எண்ணுக்கோ அழைத்து புகார் அளிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபத்தான நிலையில் மின்வயர் நடவடிக்கை எடுக்குமா ? மின்சார வாரியம் ,,,,

கூடலூர் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் அமைச்சர் கா.ராமச்சந்திரன்

,கூடலூர் சில்வர்கிளவுட், வனத்துறை சோதனை சாவடி அருகில் டெம்போ வேன் கவிழுந்து விபத்து.