தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்களின் நிலத்தினை மீட்கும் பணியில் தமிழர் விடுதலைக் களம்.
திருநெல்வேலி மாவட்டம்
பாளை தாலுகாவிற்குட்பட்டது குன்னத்தூர் பகுதியாகும்,
இப்பகுதியில்
தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்கள் 250 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இப்பகுதி மக்களுக்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோயிலுக்கு
சொந்தமான 85 செண்ட் நிலத்தினை போலியான ஆவணங்கள் மூலமாக ஆக்கிரமிப்பு செய்திட குன்னத்தூரில் செயல்படும் குறுக்குத்துறை கூட்டுறவு கடன் சங்கத் தினர் முயற்சித்து வருகின்றனர் ஆகவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி குன்னத்தூர் தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்களோடு திருநெல்வேலி
மாவட்ட தமிழர் விடுதலைக் களம் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தது
இதில் குன்னத்தூர் தேவேந்திரகுல நாட்டாண்மைகள்
திரு பட்டாணி,
திரு மகேஷ்,
தமிழர் விடுதலைக் களம்
நெல்லை மாவட்ட செயலாளர்
திரு
வே.ச. முத்துக்குமார்
டவுண்பகுதி செயலாளர் அலெக்ஸ் இணையதள பிரிவு பிரதாப்,கண்ணன் பிரதீப் கிளை செயலாளர் அபி, கெளதம்
மற்றும் குன்னத்தூர் தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள்