வீட்டில் வசதி இல்லாததால் மரக்கிளைகளில் தனிமைப்படுத்தி கொண்ட அவலம்

சென்னையிலிருந்து மேற்குவங்கத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு சென்ற 7 பழங்குடியின இளைஞர்கள் வீட்டில் வசதி இல்லாததால் மரக்கிளைகளில் தங்களை தனிமைப்படுத்தி கொண்டனர்.

மேற்குவங்கத்தை சேர்ந்த பழங்குடியின இளைஞர்கள் சென்னை மோட்டார் உதிரிபாகம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளனர். கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் இவர்கள் வேலைபார்த்த நிறுவனம் மூடப்பட்டதை தொடர்ந்து கடந்த 24ம் தேதி சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர்.

மேற்குவங்கத்தின் புருலியா மாவட்டத்தில் பலாரம்பூர் கிராமத்தை சேர்ந்த இவர்கள் கிராம சுகாதார மருத்துவர்களிடம் தங்களை பரிசோதித்து கொண்டனர். மருத்துவர்கள் இவர்களை 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.


பழங்குடியின இளைஞர்களின் வீட்டில் போதுமான வசதி இல்லாததால் கிராமத்திற்கு வெளியே பெரிய மரத்தின் கிளையில் தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். மரக்கிளைகள் நடுவே மரப்பலகை கொண்டு படுக்கை அமைத்து தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.

தனிமைப்படுத்தி கொண்ட இளைஞர்களுக்கு மரத்திற்கு கீழே உணவு வைத்தப்பின் அவர்கள் கீழே இறங்கி வந்து தங்கள் உணவை எடுத்துக் கொண்டு வருகின்றனர்.

மரக்கிளைகளில் தனிமைப்படுத்தி கொண்டவர்களை தற்காலிகமாக அமைக்கப்படும் முகாம்களில் தங்கவைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக கிராம பஞ்சாயத்து அதிகாரி தெரிவித்துள்ளார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபத்தான நிலையில் மின்வயர் நடவடிக்கை எடுக்குமா ? மின்சார வாரியம் ,,,,

கூடலூர் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் அமைச்சர் கா.ராமச்சந்திரன்

,கூடலூர் சில்வர்கிளவுட், வனத்துறை சோதனை சாவடி அருகில் டெம்போ வேன் கவிழுந்து விபத்து.