அந்தரங்கப் பகுதியில் உள்ள கருமையை நீக்க இதை செய்யுங்கள்..!
ஆண் பெண் இருவருக்கும் இந்த பிரச்னை வரும். அந்தரங்கப் பகுதிகள் ஹார்மோன் சமநிலையின்மை, உடல் பருமன் என பல காரணங்களால் கருமையாக இருக்கலாம். அவற்றை சரி செய்ய இந்த வீட்டுக் குறிப்புகளை செய்து பாருங்கள்.


எலுமிச்சை மற்றும் தேங்காய் எண்ணெய் : எலுமிச்சை சாறை தேங்காய் எண்ணெயில் கலந்து கருப்பாக இருக்கும் இடங்களில் தடவுங்கள். தினமும் குளுக்கும் முன் இதை செய்யுங்கள்.


பேக்கிங் சோடா : பேங்கிங் சோடாவில் தண்ணீர் கலந்து அந்த பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள்.


தக்காளி : தக்காளியை அரைத்து அந்த இடத்தில் தடவலாம்.15 நிமிடக்கள் கழித்து கழுவிவிடுங்கள்.


கற்றாழை : கற்றாழையை கருப்பாக உள்ள இடங்களில் தடவி வர நிறம் மாறும்.


உருளைக்கிழங்கு : உருளைக்கிழங்களை ஸ்லைஸ் போல் நறுக்கி கருப்பாக உள்ள இடத்தில் 10 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள்.


கடலை மாவு : கடலை மாவு , மஞ்சள் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து அந்த இடத்தில் தடவி 10 நிமிடங்கள் காய்ந்ததும் கழுவிவிடுங்கள். கடலை மாவில் பால் கலந்தும் தடவலாம்.
கருத்துகள்