கொரோனா முன்னெச்சரிக்கையாக கூனம்பட்டி கிராமத்தில் வேப்பிலை, மஞ்சள் நீர் தெளிப்பு!!


வேப்பிலை மற்றும் மஞ்சள் ஆகியவை மிகச்சிறந்த கிருமி நாசினிகளாக உள்ளன. இதைப் பயன்படுத்துவதன் மூலம் கொரோனா பாதிப்பை தவிர்க்கலாம் என கிராம மக்கள் நம்புகின்றனர்.


கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் திருவில்லிபுத்தூர் வட்டம்  கூனம்பட்டி கிராமத்தில் இளைஞர்கள் ஒன்றினைந்து கொரோனா  கிருமி பரவலை தடுப்பதற்காக  மஞ்சள் மற்றும் வேப்பிலை கலந்து நீரை கிராமம் முழுக்க தெளித்து வருகின்றனர்.


கொரோனா பரவுதல் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனவை விடவும், அது ஏற்படுத்தியுள்ள அச்சம்தான் மக்களை மிகவும் பாதித்துள்ளது. இதற்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், மக்கள் பாரம்பரிய பொருட்களான மஞ்சள், வேப்பிலை, இஞ்சி, மிளகு, சீரகம் போன்றவற்றை நோய் எதிர்ப்புகளாக பயன்படுத்தி வருகின்றனர்.


இவற்றை பயன்படுத்தும் முறை குறித்து, சமூக வலைதளங்களில் ஏராளமான பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிலையில் கிராமப்புறங்களில் மஞ்சள், வேப்பிலை கலந்த நீரை தெளிக்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.



திருவில்லிபுத்தூர் வட்டம்,கூனம் பட்டி கிராமத்தில் மினி லாரிகளில் மஞ்சள், வேப்பிலை நீர் கேன்களில் எடுத்துச் செல்லப்பட்டு ஊர் முழுக்க தெளிக்கப்படுகிறது.


 



RELATED




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபத்தான நிலையில் மின்வயர் நடவடிக்கை எடுக்குமா ? மின்சார வாரியம் ,,,,

கூடலூர் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் அமைச்சர் கா.ராமச்சந்திரன்

,கூடலூர் சில்வர்கிளவுட், வனத்துறை சோதனை சாவடி அருகில் டெம்போ வேன் கவிழுந்து விபத்து.