மதுரை ராஜாஜி மருத்துவ கல்லூரியில் கொரோனா ஆய்வகம்.. தமிழகத்தில் 8வது.. விஜயபாஸ்கர் அறிவிப்பு

சென்னை: கொரோனா பரிசோதனை மையம் மதுரை ராஜாஜி மருத்துவ கல்லூரியில் அமைய உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். கொரோனா நோயை தடுப்பதற்கு அதிகப்படியான பரிசோதனைகள் அவசியம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்து வருகிறது. இந்தியாவில் போதிய அளவுக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை என்று விமர்சனம் இருக்கிறது.


அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மதுரை ராஜாஜி மருத்துவ கல்லூரியில், பரிசோதனை பிரிவை அமைக்க அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் இது 8வது பரிசோதனை மையம் ஆகும். இந்த பகுதியில் இன்னும் அதிகம் பேருக்கு பரிசோதனை செய்வதற்கு இது உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


மதுரையில் வைரஸ் தாக்கி சிகிச்சை பெற்று வந்த ஒரு நோயாளி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். இந்த நிலையில்தான் விஜயபாஸ்கர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபத்தான நிலையில் மின்வயர் நடவடிக்கை எடுக்குமா ? மின்சார வாரியம் ,,,,

கூடலூர் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் அமைச்சர் கா.ராமச்சந்திரன்

,கூடலூர் சில்வர்கிளவுட், வனத்துறை சோதனை சாவடி அருகில் டெம்போ வேன் கவிழுந்து விபத்து.