கொரோனா தடுப்பு நடவடிக்கை.. ஒரு மாத சம்பளத்தை வழங்கும் அதிமுக எம்பிக்கள் & எம்எல்ஏக்கள்!
சென்னை: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் தங்கள் ஒரு மாத சம்பளத்தை வழங்க முடிவு செய்துள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் மொத்தம் 29 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதுவரை ஒருவர் கொரோனாவால் பலியாகி உள்ளார். மதுரையை சேர்ந்த நபர் கொரோனாவால் இன்று காலை பலியானார். இந்த நிலையில் தமிழக முதல்வர் பழனிச்சாமி கொரோனாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க நிதி உதவியாக 4000 கோடி ரூபாயை மத்திய அரசிடம் உதவியாக கேட்டு இருக்கிறார். மேலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.3,780 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது முதல்கட்ட நிதி என்று முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் இந்த பணிகளுக்காக அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் தங்கள் ஒரு மாத சம்பளத்தை வழங்க முடிவு செய்துள்ளனர். அதோடு அதிமுக எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி வழங்குவார்கள். எம்.எல்.ஏ.க்கள் தங்கள் நிதியிலிருந்து ரூ.25 லட்சமும் வழங்குவார்கள், என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கருத்துகள்