கொரோனா வைரஸ் குறித்து போலி பிரேக்கிங் நியூஸ்.. வதந்தி பரப்பிய 3 பேர் கைது..
u
சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பல நாடுகளில் பரவிக்கொண்டு இருக்கிறது. இன்று உலகத்தையே அச்சுறுத்தும் ஒரு சொல் என்னவென்றால் அது கொரோனா தான். இதனால் இதுவரை 5200க்கும் மேற்பட்டோர்கள் இறந்துள்ளனர் மேலும் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு தான் வருகிறது.
இந்நிலையில் இன்று காலை வரை இந்தியாவில் சுமார் 129 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், 3 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் கூறப்பட்டது. தற்போது இந்த எண்ணிக்கை 137 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என உறுதியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் மட்டும் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்து யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இந்த நிலையில் வேலூர் குடியாத்தம் அருகே கொரோனா வைரஸ் குறித்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வதந்திகளை பரப்பியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கருத்துகள்