இந்தியாவில் மொத்தம் 1053 பேருக்கு கொரோனா.. எந்த மாநிலத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு.. முழு விபரம்!

சென்னை: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1053 ஆக உயர்ந்துள்ளது. இதில் எந்த மாநிலத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று விவரம் வெளியாகி உள்ளது. கொரோனா உலகம் முழுக்க தீவிரமாக பரவி வருகிறது. உலக அளவில் கொரோனாவால் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,20,938 பேர் உலகம் முழுக்க பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்தியாவிலும் கொரோனா தீவிரமாக பரவ தொடங்கி உள்ளது. இன்று மட்டும் கொரோனா காரணமாக 6 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கேரளாவில்தான் அதிக பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.


மாநிலங்களில் பாதிக்கப்பட்டோர் விவரம்:


மஹாராஷ்டிரா - 196 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 7 பேர் பலியாகி உள்ளனர். கேரளா -202 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒருவர் பலியாகி உள்ளார்.


கர்நாடகா - 81 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 3 பேர் பலியாகி உள்ளனர். தெலுங்கானா - 67 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்,ஒருவர் பலியாகி உள்ளார். குஜராத் - 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 5 பேர் பலியாகி உள்ளனர்.


உத்தர பிரதேசம் - 69 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், யாரும் பலியாகவில்லை. ராஜஸ்தான்- 56 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், யாரும் பலியாகவில்லை.


டெல்லி -49 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒருவர் பலியாகி உள்ளார்.


பஞ்சாப் - 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒருவர் பலியாகி உள்ளார்.


ஹரியானா - 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், யாரும் பலியாகவில்லை. தமிழ்நாடு - 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒருவர் பலியாகி உள்ளார்.


மத்திய பிரதேசம் - 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2 பேர் பலியாகி உள்ளனர். ஜம்மு காஷ்மீர் - 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒருவர் பலியாகி உள்ளார். லடாக் -13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், யாரும் பலியாகவில்லை.


ஆந்திர பிரதேசம் - 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், யாரும் பலியாகவில்லை. மேற்கு வங்கம் - 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒருவர் பலியாகி உள்ளார். சண்டிகர் - 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், யாரும் பலியாகவில்லை..


பீகார் - 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒருவர் பலியாகி உள்ளார்.


சட்டீஸ்கர் - 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், யாரும் பலியாகவில்லை. உத்தரகாண்ட் - 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், யாரும் பலியாகவில்லை.


கோவா - 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், யாரும் பலியாகவில்லை. இமாச்சல்பிரதேசம் - 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒருவர் பலியாகி உள்ளார். ஒடிசா - 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், யாரும் பலியாகவில்லை.


அந்தமான் நிக்கோபார் - 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், யாரும் பலியாகவில்லை. மணிப்பூர் -ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர், யாரும் பலியாகவில்லை


. மிசோரம் - ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர், யாரும் பலியாகவில்லை.


புதுச்சேரி - ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர், யாரும் பலியாகவில்லை.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபத்தான நிலையில் மின்வயர் நடவடிக்கை எடுக்குமா ? மின்சார வாரியம் ,,,,

கூடலூர் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் அமைச்சர் கா.ராமச்சந்திரன்

,கூடலூர் சில்வர்கிளவுட், வனத்துறை சோதனை சாவடி அருகில் டெம்போ வேன் கவிழுந்து விபத்து.