100 புதிய ஆம்புலன்ஸ்கள் தயார் : அமைச்சர்
சென்னை: 100 புதிய ஆம்புலன்ஸ்கள் , தயார் நிலையிலும் ஒரு கோடி முக கவசங்களுக்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வெளிநாட்டில் இருந்து வந்தவர்களால் பாதிப்பு ஏற்படுகிறது. அவர்கள் வீட்டை விட்டு வெளியே வர கூடாது. மேலும் அவர்களை கடுமையாக எச்சரிக்கிறேன். தகவல் தெரிவிக்காவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நாளை 100 புதிய ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளன.
கண்காணிக்கப்படும் நபர் வெளியில் நடமாடுவது தெரிய வந்தாலும் கடுமயைானநடவடிக்கை எடுக்கப்படும். 28 நாட்கள் வீட்டில் தனிமை படுத்திக்கொள்வதை கட்டாயமாக்கி கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனையில் தேவையான உபகரணங்கள் உள்ளன. வெளிநாடுகளில் இருந்து வந்த 15,298 பேர் கண்காணிக்கப்படுகின்றனர்.
ஒரு கோடி முக கவசங்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. உலகம் மழுவதும் ஊரடங்கு போன்ற நிலை தான் உள்ளது.தமிழக அரசு நன்கு திட்டமிட்டு செயல்பபட்டு வருகிறது. யாருக்கும் கொரோனா வர கூடாது என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறோம். பாதிக்கப்பட்ட அனைவரின் உடல்நலம் சீராக உள்ளது.
கருத்துகள்