டாஸ்மாக் வேண்டாம்.. கிராம சபை தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அரசு தயங்குவது ஏன்? ஹைகோர்ட் கேள்வி?.



  • டாஸ்மாக் கடைகள் வேண்டாம் என கிராம சபை கூட்டத்தில் மக்கள் தீர்மானம் நிறைவேற்றினால் அதை நடைமுறைப்படுத்துவதில் அரசு தயக்கம் காட்டுவது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.



    மதுபான கடைகள் இடமாற்றம் தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி சாஹி, நீதிபதி சி.வி. கார்த்திகேயன், நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது..




     



    அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், 2004 முதல் 2020-ம் ஆண்டு வரை 35 சதவிகித மதுபான கடைகளின் எண்ணிக்கை குறிக்கப்பட்டுள்ளது, 12 மணி நேரமாக இருந்த மதுபான கடையின் பணி நேரத்தை 10 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், நிர்வாக ரீதியில் மதுபான கடைகளை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்..


    கிராம சபை கூட்டங்களில் 8 வழி சாலை, சிஏஏ, நீட் போன்ற மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதை சுட்டிகாட்டிய அவர், கிராம சபை கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை சட்ட விதிகளுக்கு உட்பட்டு பரிசீலிப்பதாக தெரிவித்தார்..






     

    மதுபான கடைகள் அமைப்பதற்கு முன் அந்த பகுதி மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்பதை ஏன் சட்டமாக்க கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், டாஸ்மாக் கடைகள் வேண்டாம் என கிராம சபை கூட்டத்தில் மக்கள் தீர்மானம் நிறைவேற்றினால் அதை நடைமுறைப்படுத்துவதில் அரசு தயக்கம் காட்டுவது ஏன் என்று சாடினர்..









கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபத்தான நிலையில் மின்வயர் நடவடிக்கை எடுக்குமா ? மின்சார வாரியம் ,,,,

கூடலூர் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் அமைச்சர் கா.ராமச்சந்திரன்

,கூடலூர் சில்வர்கிளவுட், வனத்துறை சோதனை சாவடி அருகில் டெம்போ வேன் கவிழுந்து விபத்து.