என்னை தோல்வியடையச் செய்த வாக்காளருக்கு நன்றி போஸ்டரால் பரபரப்பு


  • !திருவில்லிபுத்தூர்: ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த சில வேட்பாளர்கள் தங்கள் ஆதங்கத்தை போஸ்டர் அடித்து வெளிப்படுத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே அத்திக்குளம்-செங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு காசி என்பவர் போட்டியிட்டார். இவர் தோல்வியடைந்தார். இதனால் விரக்தியடைந்த காசி, வாக்காளர்களுக்கு வினோதமாக நன்றி தெரிவித்து போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார். அதில், ''என்னை தோல்வியடைய செய்த வாக்காளர்களுக்கு நன்றி... நான் உங்களை நம்பினேன்... நீங்கள் இப்படி துரோகம் செய்வீர்கள் என கனவில் கூட நினைக்கவில்லை...'' என எழுதியுள்ளார்.

    இவர் ஏற்கனவே இந்த பகுதி பஞ்சாயத்து தலைவராக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இதேபோல் அத்திகுளம்-தெய்வேந்திரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு பிரிதிவிராஜன் என்பவர் போட்டியிட்டார்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபத்தான நிலையில் மின்வயர் நடவடிக்கை எடுக்குமா ? மின்சார வாரியம் ,,,,

கூடலூர் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் அமைச்சர் கா.ராமச்சந்திரன்

,கூடலூர் சில்வர்கிளவுட், வனத்துறை சோதனை சாவடி அருகில் டெம்போ வேன் கவிழுந்து விபத்து.