சாலையோரம் சிதறிக்கிடந்த ஓட்டுச் சீட்டுகள்


  • பெரம்பலுார்: உள்ளாட்சித் தேர்தலில், ஊராட்சித் தலைவர் பதவிக்கு பயன்படுத்திய முத்திரையிடப்பட்ட ஓட்டுச் சீட்டுகள், பெரம்பலுார் அருகே, சாலையோரம் சிதறிக் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.உள்ளாட்சித் தேர்தலில் பதிவான ஓட்டுக்கள், 2ம் தேதி எண்ணப்பட்டன. இந்நிலையில், ஓட்டுச்சாவடி மைய அலுவலர் கையொப்பத்துடன், வாக்காளர்கள் முத்திரையிட்ட, 100க்கும் மேற்பட்ட ஓட்டுச் சீட்டுகள், பெரம்பலுார் மாவட்டம், சித்தளி மற்றும் ஒதியம் கிராமங்களுக்கு இடையே சாலையோரத்தில், சிதறிக் கிடந்தன. அவ்வழியே சென்ற பொதுமக்கள், குன்னம் காவல் மற்றும் வருவாய் துறைக்கு தகவல் கொடுத்தனர். குன்னம் தாசில்தார் சித்ரா தலைமையிலான வருவாய்த் துறையினரும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்..சிதறிக்கிடந்த 113.ஓட்டு  சீட்டுக்களை சேகரித்த தாசில்தார் சித்ரா .குன்னம் தாலுகா அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் விசாரணை மேற்கொண்டார் .


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபத்தான நிலையில் மின்வயர் நடவடிக்கை எடுக்குமா ? மின்சார வாரியம் ,,,,

கூடலூர் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் அமைச்சர் கா.ராமச்சந்திரன்

,கூடலூர் சில்வர்கிளவுட், வனத்துறை சோதனை சாவடி அருகில் டெம்போ வேன் கவிழுந்து விபத்து.