இலங்கை தலைநகரில் சீனர்கள் பேருந்துகளில் ஏறினால் அரண்டு தலை தெறிக்க ஓடும் மக்கள்




    • இலங்கை தலைநகர் கொழும்பு உட்பட பல பகுதிகளில் பேருந்துகளில் சீனாவை சேர்ந்தவர்கள் ஏறும் போது மற்ற பயணிகள் அங்கிருந்து விலகிச் செல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர் . சீன நாட்டவர்கள் அதிவேக நெடுஞ்சாலை பேருந்துகளில் ஏறும் போது மற்ற பயணிகள் பேருந்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
      அவ்வாறு மாத்தறையில் இருந்து கொட்டாவ மற்றும் கடுவெல பேருந்தில் பயணிகள் குவிந்திருந்த நிலையில் ஒரு வெளிநாட்டு பயணி பேருந்தில் ஏறியதால் மற்ற பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளனர்.
      அதிலும் நெடுஞ்சாலையில் பயணிகள் இறங்கினால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் இதனால் பேருந்திற்கு ஏறுமாறு நடத்துன்னர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • ஏதாவது ஒரு வகையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாத்திக்கப்பட்ட சீன நாட்டவர் பேருந்தில் இருந்தால், ஒன்றரை மணி நேரத்திற்குள் தங்கள் உடலிலும் தொற்றும் ஆபத்து உள்ளதால் தாம் ஏற முடியாதென பயணிகள் சொல்லி வருகின்றனர் . அந்த தருணத்தில் தான் பேருந்தை விட்டு வெளியேற முடியாதென கூறி சீன நாட்டவர் தெரிவித்துள்ளார். இதனால் அந்த நெடுஞ்சாலையில் நீண்ட தாமதம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு வேறு பேருந்துகளில் பயணிகள் ஏறிச் சென்றுள்ளனர்




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபத்தான நிலையில் மின்வயர் நடவடிக்கை எடுக்குமா ? மின்சார வாரியம் ,,,,

கூடலூர் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் அமைச்சர் கா.ராமச்சந்திரன்

,கூடலூர் சில்வர்கிளவுட், வனத்துறை சோதனை சாவடி அருகில் டெம்போ வேன் கவிழுந்து விபத்து.