அரசுப்பள்ளியில் அறிவுத்திறன் போட்டி ..!
தேவிபட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலாம் மாணவர்கள் சார்பாக அறிவுத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு இன்று பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.நிகழ்விற்கு கலாம் மாணவர்கள் இயக்கத்தின் தலைவர் "விஜேந்திர ராஜா "அவர்கள் தலைமை தாங்கினார்கள். சிறப்பு விருந்தினராக தேவிபட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் ஹமீதியா ராணி ஜாஹிர் உசைன் அவர்கள் கலந்து கொண்டார்கள்..
தேவிபட்டினம் கலாம் மாணவர்கள் அமைப்பின் பொருப்பாளர் ரோகன் வரவேற்புரையாற்றினார். பள்ளி தலைமை ஆசிரியர் மோகன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்வில் அப்துல்கலாம் அவர்களின் உறுதி மொழிகளை மாணவ மாணவிகளுக்கு கற்று கொடுக்கப்பட்டது. நிகழ்வின் இறுதியில் கடலாடி ஒன்றிய பொருளாளர் பிரகாஷ் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
கருத்துகள்