9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பொழுது பேரூராட்சி நகராட்சி தேர்தலை அடுத்த மாதம் ஒன்றாக நடத்த மாநிலத் தேர்தல் ஆணையம் திட்டம்
- தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 27 மாவட்டங்களில் கடந்த மாதம் 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றது. 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் மீதம் உள்ள 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெறும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் போது பேரூராட்சி, நகராட்சிகளுக்கும் தேர்தலை ஒன்றாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள 27 மாவட்டங்களிலும் நகராட்சி, பேரூராட்சி தேர்தல் நடைபெற உள்ளன.
கருத்துகள்