2 ஆம் வகுப்பு மாணவனை, சகமாணவனின் கழிவை அள்ள வைத்த ஆசிரியைக்கு வைத்த ஆப்பு..!


நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, நகராட்சி பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வருபவர் விஜயலட்சுமி. இவர் சென்ற 2015 ஆம் ஆண்டு, அவரது வகுப்பறையில் படித்து வரும் 2 ஆம் வகுப்பு மாணவனை சகமாணவன் ஒருவனின் கழிவை அள்ளும் படி கூறியுள்ளார். அதன் படி, அந்த சிறுவனும் செய்திருக்கிறார்.


பின்னர், வீடு திரும்பிய அந்த சிறுவன், இது குறித்து அவரது தந்தையிடம் கூறினார். இதனால் கடும் ஆத்திரமடைந்த சிறுவனின் தந்தை நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு ஆசிரியை விஜயலட்சுமியைக் கைது செய்திருக்கிறார்கள்.


மேலும், அவர் மீது, எஸ்.சி.- எஸ்.டி. பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான வழக்கு கடந்த 5 ஆண்டுகளாக நாமக்கல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில், இன்று ஆசிரியை விஜயலட்சுமிக்கு ரூ.1000 அபராதமும், 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அளித்து நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபத்தான நிலையில் மின்வயர் நடவடிக்கை எடுக்குமா ? மின்சார வாரியம் ,,,,

கூடலூர் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் அமைச்சர் கா.ராமச்சந்திரன்

,கூடலூர் சில்வர்கிளவுட், வனத்துறை சோதனை சாவடி அருகில் டெம்போ வேன் கவிழுந்து விபத்து.